)
Andhra Venkateswara Swamy Temple Stampede: அண்டை மாநிலமான ஆந்திராவில் ஸ்ரீகாகுளத்தில் உள்ள கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 1) காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, கோயிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது, ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பக்தர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சில பக்தர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஸ்ரீகாகுளம் மாவட்டம் காஷிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் முறையான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருகை தந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்" என தெரிவித்து உள்ளார்.
இந்த கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கோயிலில் அதிகமாக இருப்பதைக் காட்டியது, நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை கூடைகளை ஏந்தி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தது தெரிந்தது. மேலும், கூட்ட நெரிசலில் பெண்கள் ஒருவரைக்கொருவரை தள்ளிவிட்டு செல்வதும் வீடியோவில் தெரிகிறது.
ஆந்திராவில் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் இன்று காலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். ஏகாதசியை முன்னிட்டு, வழக்கத்தை விட கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று ஏகாதசி என்பதால் 25,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியதாகத் தெரிகிறது. 2,000 பேர் மட்டுமே இருக்கக் கூடிய இந்த கோயிலில், இன்று 25,000 பேர் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் தான் பலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
VIDEO | Andhra Pradesh: Stampede reported at Venkateswara Temple in Kashibugga in Srikakulam district; several devotees injured, rushed to hospital. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) November 1, 2025
(Source: Third Party)#AndhraPradesh pic.twitter.com/dOJxEI4JHC
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ