பங்குச் சந்தை மோசடி.. மாதபி பூரி புச் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Stock Market Fraud News: முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், 3 செபி உயர் அதிகாரிகள், முன்னாள் பி.எஸ்.இ தலைவர் பிரமோத் அகர்வால், பி.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 3, 2025, 11:35 AM IST
பங்குச் சந்தை மோசடி.. மாதபி பூரி புச் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Madhabi Puri Buch Latest News: பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பான வழக்கில், "முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், செபி உயர் அதிகாரிகள், முன்னாள் பி.எஸ்.இ தலைவர் பிரமோத் அகர்வால், பி.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவேண்டும்" எனக் காவல்துறைக்கு மும்பையில் உள்ள சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

பங்கு சந்தை மோசடி - மனுதாக்கல் செய்த பத்திரிகையாளர்

முன்னதாக செபி முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் செபி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென தானேவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சபன் ஸ்ரீவஸ்தவா மனுதாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச்சுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர்

இந்த மனு மீதான வழக்கு விசாரணை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்பொழுது நீதிபதி, "முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், செபி உயர் அதிகாரிகள், முன்னாள் பி.எஸ்.இ தலைவர் பிரமோத் அகர்வால், பி.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவேண்டும்? என உத்தரவிட்டார்.

நீதிபதி கூறியது என்ன? 

இந்த வழக்கில் ஒழுங்கு முறை விதிகள் மீறல், கூட்டு சதி நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது. எனவே இது தொடர்பாக நேர்மையான பாரபட்சமற்ற விசாரணை தேவை. 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், முன்னாள் மும்பை பங்கு சந்தையின் தலைவர் பிரமோத் அகர்வால், மும்பை பங்கு சந்தையின் தலைமை நிர்வாக இயங்குனர் சுந்தரராமன் ராமமூர்த்தி மற்றும் செபியின் முழு நேர உறுப்பினர்கள் அஸ்வினி பாட்டியா, ஆனந்த் நாராயணன், கம்லேஷ் சந்திர வர்ஷினி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு விசாரணை நிடந்த செய்யவேண்டும். இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் செபியின் செயலற்ற தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையில் ஏற்படக்கூடிய தாக்கம் காரணமாக நீதித்துறை தலையீடு அவசியம் என்று நீதிபதி கூறினார் மற்றும் 30 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது நீதிமன்றம்.

ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியது என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை அதிகமாக காட்டி அதிக கடன்கள் பெறுவது, போலி நிறுவனங்களை துவங்கி வரி ஏய்ப்பு செய்வது போன்ற குற்றங்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதனையடுத்து செபி அமைப்பு விசாரணை நடத்தியது. அப்பொழுது செபியின் தலைவராக மாதபி பூரி புச் இருந்தார்.

இதனையடுத்து மீண்டும் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களில் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தாவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக குற்றம் சாட்டியது. 

மேலும் படிக்க - லஞ்சம்.. லஞ்சம்.. செபி தலைவர் மாதபி பூரி புச் மீது டாக்டர் சுபாஷ் சந்திரா கடுமையான குற்றச்சாட்டுகள்

மேலும் படிக்க - ஹிண்டன்பர்க் விவகாரம்: Conflict Of Interest என்றால் என்ன? இதற்கான செபியின் நெறிமுறைகள் என்ன?

மேலும் படிக்க - யார் இந்த மாதவி பூரி புச்? அவரின் சொத்து மதிப்பு மற்றும் இதர விவரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News