)
Vice President Election 2025, India Bloc Candidate: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி (Sudarshan Reddy) அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தற்போதைய மகாராஷ்டிராவின் ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். பிரதமர் மோடியே தங்களின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்கும்படி எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதர்சன் ரெட்டி, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். சுதர்சன் ரெட்டி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், கௌகாத்தி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார். அதன்பின் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதிவு உயர்வு பெற்றார். கடந்த 2011ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்றார்.
இந்தியா கூட்டணியின் சார்பாக குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஆகஸ்ட் 19) செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளது. ஜனநாயக விழுமியங்கள் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு வேட்பாளருக்கு ஒப்புக்கொண்டது எனக்கு மகிழ்ச்சி. இது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாதனை" என பேசினார். தொடர்ந்து, வேட்பாளர் குறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "கௌகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். சமூக நீதி மற்றும் அரசியல் நீதிக்கான ஆதரவாளர்" என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்து, இந்தியா கூட்டணியில் அங்கும் வகிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்தது. எனவே பதிலுக்கு இந்தியா கூட்டணியும் தமிழரையே வேட்பாளராக நிறுத்தும் என்றும், ப. சிதம்பரம், திருச்சி சிவா, மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோரின் பெயர்களும் அடிப்பட்டன.
ஆனால், தற்போது ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியை அறிவித்து இந்தியா கூட்டணி என்டிஏவுக்கு செக் வைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதன்மூலம், என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Vice President Election: எப்போது துணை ஜனாதிபதி தேர்தல்?
கடந்த ஆக. 7ஆம் தேதி அன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஆக. 21ஆம் தேதிதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், ஆக. 22ஆம் தேதி தேர்தல் ஆணையம் வேட்பு மனுவை பரிசீலனைக்கு உட்படுத்தும். தொடர்ந்து, ஆக. 25ஆம் தேதிதான் வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். தற்போது இரண்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலையில், வரும் செப். 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ