Nuclear Weapon: அணு ஆயுதம் தாக்குதல் என்றாலே அனைவருக்கும் ஜப்பானின் ஹீரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் உலக மக்களின் ஞாபகத்திற்கு வரும். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், 1945ஆம் ஆண்டு ஆக. 6ஆம் தேதி ஹிரோஷிமா மீதும், ஆக. 9ஆம் தேதி நாகசாகி மீது அமெரிக்க தொடுத்த இந்த தாக்குதலில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதில் தாக்குதலில் உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், வீடுகளை இழந்தனர். பள்ளி, மருத்துவமனை போன்ற உள்கட்டமைப்புகள் தரைமட்டமாகின. பலரும் கதிர்வீச்சால் நீண்ட கால உடல்நல பாதிப்பை அடைந்தனர். இப்படி பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
Nuclear Weapon: அணு ஆயுதம் வைத்திருக்கும் 9 நாடுகள்
அப்போதிருந்து, அணு ஆயுதம் என்றாலே சர்வதேச சமூகம் அச்சத்தில் உறைந்துபோகும் எனலாம். மேலும் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளே உலகில் பலமான நாடுகள் என்ற பிம்பமும் எழுந்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா உள்ளிட்ட 9 நாடுகளிலேயே அணு ஆயுதம் இருப்பதாக கூறப்படுகிறது.
Nuclear Weapon: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்
தற்போது ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரிலும் அணு ஆயுதம் குறித்த பேச்சுகள் அடிப்பட்டன. இந்நிலையில், பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவாகி உள்ள சூழலில், அணு ஆயுதம் என்ற பேச்சும் இந்தியர்களிடையே எழுந்துள்ளது. மேலும், தேவைப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்திருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
Nuclear Weapon: தாக்குதலுக்கான வாய்ப்பு குறைவு
இருப்பினும், அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் அது சர்வதேச அளவில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும், கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனவே அதற்கான வாய்ப்பு 1% குறைவு என்றே சொல்லலாம். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவை யாராவது அணு ஆயுதம் மூலம் தாக்குதல் தொடுத்தால் எந்தெந்த பகுதிகள் அதிகமாக பாதிக்கும், எந்தெந்த பகுதிகள் குறைவான பாதிப்பை சந்திக்கும் என்பதை இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
Nuclear Weapon: எந்தெந்த நகரங்களில் பாதிப்பு வரும்?
இந்தியாவை பொறுத்தவரை சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களாக உள்ளன. ஒரு உதாரணத்திற்கு, அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இந்த நகரங்களே பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனலாம். ஏனென்றால் இங்கு அதிக மக்கள் தொகை இருப்பதால் பயங்கரவாதிகளின் வியூகங்களில் இந்த நகரங்களே அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
Nuclear Weapon: அணு ஆயுதத்தின் பாதிப்புகள் என்னென்ன?
நாகசாகியில் பயன்படுத்தப்பட்ட 25 கிலோ டன் அணு ஆயுதம் இந்திய நகரங்களின் மீது பயன்படுத்தப்பட்டால் 7 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை மக்கள் உடனடியாக உயிரிழக்க வாய்ப்புள்ளது. 100 கிலோ டன் அணு ஆயுதம் ஒரு நகரின் 20 லட்சம் மக்களை கொன்று குவிக்கும் எனலாம்.
25 கிலோ டன் அணு ஆயுதம் பயன்படுத்த 1.6 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ஒட்டுமொத்த கட்டுமானங்களும் தரைமட்டமாகிவிடும் என கூறப்படுகிறது. அதன் தாக்கம் 50 கி.மீ., முதல் அதற்கு அதிகமான தூரம் வரை கூட இருக்கும். அதாவது, உதாரணத்திற்கு சென்னையில் அணு ஆயுதம் வீசப்பட்டால் அதன் தாக்கம் செங்கல்பட்டு வரை கூட நீளும் எனலாம்.
Nuclear Weapon: நாடே ஸ்தம்பித்துவிடும்
அணு ஆயுதம் தாக்கப்படாத நகரங்கள் கூட பாதிக்கப்படலாம். அதாவது சென்னை தாக்கப்பட்டாலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடலம். கதிர்வீச்சு பாதிப்பு, உணவு பற்றாக்குறை, மின்சாரமின்மை, பொருளாதார சீர்குலைவு என ஒட்டுமொத்த நாடே ஓரிரு நாளில் ஸ்தம்பித்துவிடும் எனலாம்.
அதேநேரத்தில், மின் கட்டமைப்புகள், மருத்துவமனைகள், போக்குவரத்து கட்டமைப்புகள் மற்றும் வாகனங்கள், தகவல் தொடர்பு கட்டமைப்புகள் மொத்தமாக சிதிலமடைந்து பாதிப்படையும். இதனால், காயமடைந்தவர்கள், உயிர் பிழைத்தவர்களுக்கு கூட தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்க வழி ஏற்படாமல் போகும். அத்தியாவசிய தேவைக்கே திண்டாடும் நிலை ஏற்படலாம்.
Nuclear Weapon: சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்
அணு ஆயுதத்தால் ஏற்படும் மிகப்பெரிய பேரழிவே அதன் கதிர்வீச்சு பாதிப்புதான். கதிர்வீச்சால் ஆறுகள் பாழாய் போகும். பயிர்கள் கருகிவிடும். காற்றும் கூட விஷமாக மாறிவிடும் சூழல் எழலாம். அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள், மரபணு ரீதியில் பாதிப்புகள் ஏற்படலாம். பல ஆண்டுகளுக்கு சுற்றுச்சுழலில் கதிர்வீச்சு பாதிப்புகளின் சுவடுகள் இருந்துகொண்டே இருக்கும்.
கதிரியக்க மண்டலங்களை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேற நேரிடும். நகரங்களில் இருந்து பலரும் கிராமப்புறங்களை நோக்கி செல்வார்கள். கிராமப்புற வளங்கள் சுரண்டப்படும். மனிதநேய செயல்பாடுகள் குறைந்துவிடும். பஞ்சம், பட்டினி, நோய் போன்றவை தலைவிரித்தாடும்.
Nuclear Weapon: இந்த பகுதிகள் தப்பிக்க வாய்ப்பு?
அணு ஆயுதம் தாக்குதலில் நகரங்கள் அதிகம் பாதிக்கப்படும். அதேநேரத்தில், கிராமத்தில் பாதிப்புகள் குறைவாக இருக்கும் எனலாம். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்ற முக்கிய நகரங்களை போல் இல்லாமல் குறைவான பாதிப்புகளை எதிர்கொள்ளும்.
இருப்பினும் அவை பாதுகாப்பாக இருக்கும் என்பதை சொல்லிவிட முடியாதுதான். நகர்புறமே மொத்தமாக சிதிலமடைந்துவிடும் சூழலில், விவசாயம் நிறைந்த கிராமங்கள், தற்சார்பான சமூகங்கள், நகர கட்டமைப்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் பாதிப்புகள் மிக மிக குறைவாகவே இருக்கும் எனலாம்.
மேலும் படிக்க | போர் பதற்றம்; பாகிஸ்தானின் தாக்குதல்: கவாஜா முகமது எச்சரிக்கை
மேலும் படிக்க | ஐ.நா.வில் மாஸ் காட்டிய இந்திய துணை தூதர்.. பாகிஸ்தான் அமைச்சருக்கு பதிலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









