Who Is Justice Bhushan Ramkrishna Gavai: இரண்டாவது மூத்த நீதிபதியான பூஷன் ராமகிருஷ்ண கவாய் அவர்க்லைன் பெயரை பரிந்துரை செய்து மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தற்போதைய தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா பரிந்துரை கடிதத்தை அதிகாரப்பூர்வமாக அனுப்பியுள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற இருப்பதால், மே 14 அன்று இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்க உள்ளார். உச்சநீதிமன்றத்தினுடைய 52 வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13 அன்று ஓய்வு பெறவுள்ளதால், மே 14 அன்று இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நீதிபதி கவாய் அவர்கள் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், சுமார் ஆறு மாதங்கள் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆண்டுகள் ஆகும்.
புதிய தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் யார்?
2007 ஆம் ஆண்டு நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார். மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த நீதிபதி கவாய், 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ராஜா போன்சாலேவின் கீழ் தனது சட்டப் பணியைத் தொடங்கினார், பின்னர் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் சுயாதீனமாகப் பயிற்சி பெற்றார்.
அவரது சட்ட நிபுணத்துவம் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தை உள்ளடக்கியது. குறிப்பாக நாக்பூர் பெஞ்ச் முன். அவர் 1992 இல் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் அரசு வழக்கறிஞராகவும் ஆனார்.
அவரது நீதித்துறை வாழ்க்கை 2003 இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகத் தொடங்கியது. 2005 இல் நிரந்தர நீதிபதியானார். 2019 இல், அவர் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் தனது பதவிக் காலத்தில், நீதிபதி கவாய் பல குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கி உள்ளார். அவற்றில் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்பிற்கு முரணானது என்று ரத்து செய்த தீர்ப்பு ஆகியவை அடங்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் முடிவை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் உறுதி செய்தது. அதிலும் இவர் இடம் பெற்றிருந்தார்.
அதேபோல நவம்பர் 2024 இல், நீதிபதி கவாய் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களுக்கு எதிராக புல்டோசர்களைப் பயன்படுத்துவதை கண்டித்தது. மேலும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் குடிமக்களின் சொத்துக்களை இடிப்பது சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது என்றும் தீர்ப்பளித்தது.
மேலும் படிக்க - நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் ஜப்தி வழக்கில் திடீர் திருப்பம்
மேலும் படிக்க - நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்... கொலீஜியம் எடுத்த அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









