ரம்ஜான் நோன்பை முன்னிட்டு 7-வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை காலை 5.30-க்கு தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 7-வது கட்ட வாக்குப்பதிவு வரும் மே 19-ஆம் நாள் நடைபெறுகிறது.


மே 19-ம்தேதி நடைபெறும் 7-ம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நடக்கிறது. பீகார், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தர பிரதேசம்,  மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


இதற்கிடையே இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளதால், 7-ம் கட்ட வாக்குப்பதிவு நேரத்தை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முகமது நிஜாமுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 


இந்திரா பானர்ஜி, சஞ்சிவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிபதிகள் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தேர்லை முன்கூட்டியே நடத்தினால், வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வது, அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். 7 மணிக்கு வாக்குப்பதிவை ஆரம்பித்தாலே, வாக்காளர்களால் தங்களது வாக்கை பதிவு செய்ய முடியும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். 


மேலும் நான்கு கட்ட தேர்தல்களை சந்திதுள்ள தேர்தல் அதிகாரிகள் களைப்படைந்துள்ளனர். இந்த சூழலில் வாக்குப்பதிவு நேரத்தை காலை 5.30 மணிக்கு மாற்றியமைத்தால் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லா ஒன்றாக மாறிவிடும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தற்போது தேர்தல் 8 மணி நேரம் நடத்தப்பபட்டு வருகிறது. இதனை 11-மணி நேரமாக நீட்டிப்பது என்பது அதற்கு எதிர்மறையானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.