பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா ராஜினாமா....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி (EAC-PM) பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினராக பணியாற்றி வந்த பிரபல பொருளாதார நிபுணரும் பத்திரிகையாளருமான சுர்ஜித் பல்லா இன்று (செவ்வாய்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.  


பிரபல பொருளாதார நிபுணரும் பத்திரிகையாளருமான சுர்ஜித் பல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டரில் "பிரதம மந்திரி (EAC-PM) பொருளாதார ஆலோசனை குழுவில் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ராஜிநாமா செய்ததாக தெரிவித்தார்.


பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இதில் பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், ஆசிமா கோயல் மற்றும் சமிகா ரவி ஆகியோர் மற்ற பகுதிநேர உறுப்பினர்கள் ஆவர்.