'தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான்...' மக்களவையில் கனிமொழி அனல் பறக்க பேச்சு!

Kanimozhi: கங்கைகொண்ட சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 29, 2025, 04:51 PM IST
  • தேர்தலின் போது தமிழர்களின் பெருமையை பாஜக கண்டறியும் - கனிமொழி
  • ஆனால், கீழடி நாகரிகத்தை ஒன்றிய பாஜக ஏற்க மறுக்கும் - கனிமொழி
  • பகல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? - கனிமொழி
'தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான்...' மக்களவையில் கனிமொழி அனல் பறக்க பேச்சு!

Kanimozhi In Lok Sabha Debate: பகல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம், ஆபரேஷன் மகாதேவ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்றும், இன்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மக்களவையில் திமுக எம்.பி., கனிமொழியும் விவாதத்தில் இன்று பங்கெடுத்தார்.

Add Zee News as a Preferred Source

Kanimozhi: 'ஒருநாள் தமிழன் வெல்வான்' 

சோழன் கங்கையை கொண்டான், கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கனிமொழி பேசியது அதிகளவில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, "ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தமிழர்களின் பெருமை, கலாசாரத்தை பாஜக கண்டறிந்துவிடுகிறது. ஆனால், தமிழர்கள் தொன்மையை கண்டறிந்த கீழடி நாகரிகத்தை ஒன்றிய பாஜக அரசு ஏற்க மறுக்கிறது" என்றும் கனிமொழி காட்டமாக விளாசி தள்ளினார். 

சில நாள்களுக்கு முன் தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, சோழப் பேரரசை நினைவுக்கூர்ந்து பேசியிருந்தார். மேலும் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் மத்திய அரசு விரைவில் சிலை அமைக்கும் என்றும் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Kanimozhi: ஏன் பகல்காம் தாக்குதலை தடுக்கவில்லை?

மேலும்,பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தார். வெளிநாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்குவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு குறித்து பேசிய கனிமொழி, "அமைதி எங்களைத் தோல்வியடையச் செய்ததாலும், நீங்கள் இந்திய மக்களைத் தோல்வியடையச் செய்ததாலும் நாங்கள் இந்தக் குழுக்களில் இணைந்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

முதல் முறையாக, பாஜக எங்களை இந்தக் குழுவில் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகள் மீது ஓரளவு நம்பிக்கையைக் காட்டியது. அதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். ஆனால் நிலைமை அத்தகைய பதிலை கோரியிருக்காவிட்டால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம்" என்றார். அதாவது, பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாட்டு அரசுகளிடமும் விளக்கமளிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் அடங்கிய நாடாளுமன்ற குழுவை குறிப்பிட்டு கனிமொழி இவ்வாறு பேசினார். 

மேலும் கனிமொழி, "RAW மற்றும் IB (உளவு அமைப்புகள்) ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தபோது, ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், உளவுத்துறைக்காக ஜம்மு-காஷ்மீரின் விரிவான வரைபடங்களைத் தேடும் ஒரு பாகிஸ்தானிய நிறுவனத்தை சுட்டிக்காட்டியதே...

Kanimozhi: வெறுப்பு பேச்சு ஏன்?

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டாரா? இன்றுவரை, எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவைக் கற்றுக்கொள்ளுங்கள், பகல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு?" என்றும் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அரசோடும், பாதுகாப்பு படைகளோடும் நின்றோம். அப்போது நீங்கள் எங்கள் மதத்தைப் பார்க்கவில்லை. ஆனால், உள்நாட்டில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து வெறுப்புப் பேச்சில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.

தீவிரவாத தாக்குதலை தடுக்காவிட்டாலும் அதில் இருந்து விஸ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்?. சோஃபியா குரேஷியை அவமதித்த அமைச்சர் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்?. அரசியலுக்காக ஏன் நாட்டை பிரித்தாள பார்க்கிறீர்கள்?. மதரீதியாக நாட்டில் பிரிவினையை உருவாக்குவதுடன், வெறுப்புணர்வையும் பரப்புவது ஏன்?" அடுக்கடுக்காக கேள்வியை எழுப்பினார்.

Kanimozhi: அமித்ஷாவுக்கு பதிலடி 

நேரு நாட்டை பிரிக்க ஒப்புக்கொண்டதால் தான் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இப்போது இருக்கிறது என்றும் இதற்கு காரணம் நேரு தான் என்றும் அமித்ஷா பேசியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனிமொழி பேசியிருந்தார். அதில் அவர், "பாஜகவைப் போல காங்கிரஸ் கட்சி கூட நேருவை அவ்வளவாக நினைவில் கொள்வதில்லை. உங்களால்தான் தமிழ்நாட்டு மக்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் மீண்டும் கவனிக்கிறார்கள், இந்தியா முழுவதும் மக்கள் நேருவை மீண்டும் படிக்கிறார்கள்" என சாடினார்.

Kanimozhi: SIR மீதும் விமர்சனம்

பீகாரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வதையும் கனிமொழி விமர்சித்தார். அமித்ஷா நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் அடுத்த 20 வருடங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருப்பீர்கள் என பேசியதை குறிப்பிட்டு, "நாங்கள் அத்தனை காலம் எதிர்க்கட்சியாக இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் மக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும் தவிர, தேர்தல் ஆணையமோ SIR-ஓ கிடையாது" என்றார்.  

மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக முதலில் பேரணி நடத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின்தான் என்றும் மக்களவையில் கனிமொழி பேசினார். 

மேலும் படிக்க | ஆபரேஷன் மகாதேவ்: 14 நாள்கள் போட்ட திட்டம்... யார் இந்த பயங்கரவாதி ஹாஷிம் மூசா?

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் மோதல்: மோடி - டிரம்ப் பேசவே இல்லை... ஜெய்சங்கர் பளீச்!

மேலும் படிக்க | இந்தியாவில் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள்! என்ன என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News