Tata Group Announces Rs.1 Crore: குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தின் ரன்வே 23ல் இருந்து பிற்பகல் 1.37 மணி அளவில் லண்டன் காட்விக் நகரத்திற்கு ஏர் இந்தியா விமானம் AI171 புறப்பட்டது. இந்த விமானத்தில் விமானிகள் 2 பேர் ஊழியர்கள் 10 பேர் மற்றும் பயணிகள் 230 என மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே இந்த விமானம் விபத்துக்குள்ளானது. விமான நிலைய சுற்றுவட்டார பகுதியை தாண்டிய நிலையில் மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியின் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பலர் கருகி உயிரிழந்துள்ளனர். மருத்துவ கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவர்கள் மதிய உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 5 மருத்துவ மாணவர்களும் இதில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விமானத்தில் கைக்குழந்தைகளும் பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சலடமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்க உள்ளதாக டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியாவின் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளது.
அதேபோல், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருத்துவ செலவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாடா குழுமம் செய்து தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் சேதமடைந்த பி.ஜே. கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டித் தரப்படும் என டாடா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: MAYDAY என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்? முழு அர்த்தம்..
மேலும் படிங்க: அகமதாபாத் விமான விபத்து: 242 பேரும் உயிரிழப்பா? வெளியான ஷாக்கிங் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ