)
தட்கல் டிக்கெட் புக் செய்வது முதல் டிக்கெட் கட்டணங்கள் உயர்வு வரை பல்வேறு மாற்றங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே துறை அறிவித்திருந்தது. பொதுவாக மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். நீண்ட தூரமாக இருந்தாலும் சரி பக்கத்து ஊராக இருந்தாலும் சரி, உடல் அசதி முதல் டிக்கெட் கட்டணம் வரை ரயிலே மக்களுக்கு செளரியமாக உள்ளது.
இதனால் ரயிலில் டிக்கெட் கிடைப்பது கடினமாகவே இருக்கிறது. சாதாரணமாக டிக்கெட்டை முன்பதிவு செய்ய 2, 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்ய வேண்டி உள்ளது. திடீர் திட்டமாக இருந்தால், மக்கள் தக்கல் முன்பதிவை தேர்வு செய்கின்றனர். ஆனால் முகவர்களின் ஆதிக்கத்தால், தட்கல் முன்பதிவில் பலருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டே ரயில்வே துறை தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆதார் காட்டாயம் என அறிவித்துள்ளது.
தட்கல் முன்பதிவு
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. தனிப்பட்ட கணக்கு வைத்திருக்கும் பயணாளர்களே முதல் 30 நிமிடங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் கட்டாயம்
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய நாளை முதல் ஆதார் கட்டாயம். அதாவது IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இனைத்து OTP சரிபார்த்த பயணிகளால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். நாளை (ஜூலை 1) முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதன் காரணமாக IRCTC கணக்கு வைக்க விரும்புபவர்கள் ஆதார் எண்ணையை இணைத்து OTP சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். இதற்காக ஏற்கனவே ரயில்வே IRCTC கணக்கு வைத்திருக்கும் Gmail கணக்குகளுக்கு மேசேஜ்களாக அணுப்பி உள்ளது.
கட்டண உயர்வு
500 கிலோ மீட்டருக்குள் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதுவே 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு நாளை முதல் (ஜூலை 01) டிக்கெட் கட்டணம் உயர்கிறது. அதாவது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத வகுப்புகளில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா உயர்கிறது. அதுவே ஏசி வகுப்புகளாக இருந்தால், ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
சார்ட் தயாரிக்கும் நேரம்
ரயில் பயணங்களில் முன்பதிவு செய்து இருப்பவர்களுக்கு சார்ட்கள் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடப்படும். இதனால் டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்கு பயண முடிவை எடுப்பதற்கு கடினமாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சார்ட் தயாரிக்கும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1 நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதவு சார்ட்டுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ