)
Teeth Grew Inside Man Eyes : நாளிதழ்கள் அல்லது செய்தி தரவுகளை திறந்தாலே, எதிர்பார்க்காத பல செய்திகளால் நாம் தாக்கப்படுவதுண்டு. ஒரு சில விஷயங்கள் நடக்கும் போது, அதற்கு அறிவியல் ரீதியான சான்றும், மருத்துவ காரணங்களும் அளிக்கப்படுகிறது. ஆனாலும், ஒரு சில சம்பவங்களை பார்க்கையில், அந்த வினோதத்திற்கு என்ன பதில் என்பதே நமக்கு தெரியாமல் போய்விடும். அப்படி ஒரு சம்பவம், தற்போது இந்தியாவன் பிகாரில் நடந்திருக்கிறது.
பிகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான நபரின் வலது கண்ணுக்குள் பல் வளர்ந்திருந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
கடந்த மார்ச் மாதத்தில், அந்த நபரின் வலது கண்ணின் கீழ் பகுதியில் கட்டி போன்ற புண் உருவாகியிருக்கிறது. கடைசியில், இதற்கு பின் பல் வளருகிறது என்கிற காரணம் ஒளிந்திருக்கிறது.
கண்களில் ஏற்பட்ட இந்த பிரச்சனையால், பார்வை மங்கல், தலைவலி, தலைச்சுற்றல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டன. முதலில் உள்ளூர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற அவர், பின்னர் பாட்னா IGIMS மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு செய்யப்பட்ட சிபிசிடி (Cone Beam Computed Tomography) ஸ்கேன் மூலம் அவரது கண்ணின் கீழ் பகுதியில் பல் வேர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் முகத்தில் வீக்கம் ஏற்பட்டு, மேலுள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சம்பவம் குறித்து IGIMSயின் டாக்டர் நிம்மி சிங், “தாயின் கருவில் முகம் வளரும்போது பல் உருவாக்கும் தன்மை திசை மாற்றம் அடைந்து, கண் அருகே வளர்ந்திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம், மருத்துவ அறிவியலில் மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது.
எப்படி வளர்ந்தது?
சிசுக்களுக்கு 6-12 வாரங்களில் கர்ப்பமாக இருக்கும் போது பற்களுக்கான டிஷுக்கள் வளர ஆரம்பிக்கும். இதற்கு Lamina என்று பெயர். இதுதான் பல் வளர அடித்தளம் ஆகும். இப்போது பாதிக்கப்பட்ட நபருக்கு இதில்தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
இவருக்கு, இந்த Dental Lamina, பற்கள் வளரும் தாடையில் வளராமல், கண் திசுக்களுக்கு பின் வளர்ந்திருக்கிறது. இது, நாளாக நாளாக வளர்ந்து சைனஸாக உருவெடுத்துள்ளது.
எப்போதும் உடலின் நோயெதிர்ப்பு சக்திகள் உடலில் பிரச்சனை அல்லது புதுவிதமாக ஏதேனும் வளர்கையில் அதனை சுற்றி ஒரு லேயரை உருவாக்கி விடும். இதற்குதான் கட்டி (Cyst) என்று பெயர். பாதிக்கப்பட்டவரின் கேஸில், அவருக்கு அந்த பல் வளரும் பாதிப்பு முகத்தை வீங்க வைத்தும், கண் பார்வையை மங்க வைத்தும், தாடையில் கட்டியையும் வளர வைத்துள்ளத்து.
உலகிலேயே 0.01% பேருக்குதான் இப்படி ஒரு பிரச்சனை வருமாம். இதனை எடுத்த மருத்துவர்கள், இதற்காக வாய் வழியாக ஆப்ரேஷன் செய்ததாகவும், இதற்கு 10-12 தையல்கள் வரை போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கு பிறகு, அந்த நபரின் கண் பார்வை தெளிவானதாகவும் கூறுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ