வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்க சதி... குண்டை தூக்கிப்போட்ட தேஜஸ்வி - இது ஏன் முக்கியம்?

Bihar Assembly Election Result 2025: வாக்கு எண்ணிக்கை செயல்முறையையும் மெதுவாக்க ஒரு திட்டம் போடப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 14, 2025, 08:34 AM IST

    மொத்தம் 67.13% வாக்குகள் பதிவு

    243 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தீவிரம்

    தேஜஸ்வி யாதவ் முக்கிய வேண்டுகோள்

வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்க சதி... குண்டை தூக்கிப்போட்ட தேஜஸ்வி - இது ஏன் முக்கியம்?

Bihar Assembly Election Result 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கு இன்று நடைபெறுகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் ஒவ்வொரு சுற்றாக எண்ணப்படும். மொத்தம் 67.13% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Add Zee News as a Preferred Source

Bihar Election Result 2025: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பீகார் மாநிலமே தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. ஆளும் பாஜகவின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் சார்ந்த பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. வாக்குத் திருட்டு, அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்டவை ஆளும் கட்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என குற்றஞ்சாட்டப்பட்டது.

Bihar Election Result 2025: வாக்கு எண்ணிக்கையை மெதுவாக்க சதி திட்டம்

அந்த வகையில், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்றிரவு (நவ. 13) அளித்த பேட்டியில், "நாளை (அதாவது இன்று) முழு வாக்கு எண்ணிக்கை செயல்முறையையும் மெதுவாக்க ஒரு திட்டம் போடப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது, குறிப்பாக வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள இடங்களில் வாக்கு எண்ணிக்கை மெதுவாக நடத்தப்படலாம்" என்றார். "அனைத்து அதிகாரிகளுக்கும், குறிப்பாக தேர்தல் ஆணையத்திற்கும் எங்கள் வேண்டுகோள் என்னவென்றால் வாக்குகளை பாரபட்சமின்றி எண்ணுங்கள்" என வலியுறுத்தினார்.

Bihar Election Result 2025: தேஜஸ்வி யாதவ் எச்சரிப்பது ஏன்?

கடந்த 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், வெறும் 11-12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசமே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கும் இருந்தன. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களிலும், மகா கூட்டணி 110 இடங்களிலும் வென்றன. 15 தொகுதிகள்தான் ஆட்சியை உறுதிசெய்தது. மேலும், 1000க்கும் குறைவான வாக்குகளே பல தொகுதிகளில் இரு கூட்டணிக்கு வித்தியாசமாக இருந்திருக்கிறது. எனவே, இது 2025 தேர்தலிலும் இது எதிரொலிக்கலாம் என்பதால், வாக்கு எண்ணிக்கையில் சுணக்கம் காட்டக்கூடாது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Bihar Election Result 2025: NDA போட்டிப்போடும் தொகுதிகள்

2025 பீகார் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகள், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 28 தொகுதிகள், ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.

Bihar Election Result 2025: மகா கூட்டணியின் தொகுதிகள்

மகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 61 தொகுதிகளிலும், சிபிஎம் (எம்எல்) 20 தொகுதிகளிலும், விகாஷீல் இன்சான் கட்சி 12 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும், India Inclusive Party 3 தொகுதிகளிலும், ஜனசக்தி ஜனதா தளம் 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. மகா கூட்டணி 2 சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிக்கிறது. மகா கூட்டணியில் உள்ள கட்சிகளே 12 தொகுதிகளில் எதிர் எதிரேவும் மோதிக்கொள்வது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க | பீகார் மக்களின் ஆணை என்ன?.. 46 வாக்குச்சாவடிகளில் 243 சட்டசபை இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை!

மேலும் படிக்க | பீகார் தேர்தல் முடிவுகள் 2025: இன்று ஒரு தீர்க்கமான நாள்! வாக்கு எண்ணிக்கை எத்தனை மணிக்கு?

மேலும் படிக்க | நிதிஷ் குமார் vs தேஜஸ்வி யாதவ்: பீகாரில் ஆட்சியை தீர்மானிக்கும் பெண்கள்... அரியணை யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News