)
Telangana Man Murdered Pregnant Wife : பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், வீட்டிற்குள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள், வேறு ஒருவரிடம் நம்பி தனது மகளை திருமணம் செய்து வைத்தாலும் சரி, அந்த பெண்ணே நம்பி ஒருவரை கரம் பிடித்தாலும் சரி, அவர்கள் இறுதியில் அந்த பெண்ணிற்கு தீங்கு செய்பவர்களாக மாறி விடுகின்றனர். நொய்டாவில் வரதட்சணை கொடுமை காரணமாக ஒரு பெண் தனது கணவர் வீட்டாரால் தீ வைத்து கொளுத்தப்பட்டார். இந்த சம்பவத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பு, இன்னொரு சம்பவம் தெலங்கானாவில் நடந்திருக்கிறது.
தெலங்கானாவில் இருக்கும், பொடுபால் என்கிற பகுதியில் வசித்து வந்தவர் மகேந்தர் ரெட்டி. டாக்சி ஓட்டுனரான இவர், கிழக்கு பாலாஜி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர், விகாராபாத். இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்வாதி என்கிற 21 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண வாழ்க்கை, முதல் 1 மாதத்திற்கு நன்றாகத்தான் சென்றிருக்கிறது. ஆனால், அதன் பிறகு இருவருக்குள்ளும் பயங்கர சண்டை எழுந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம், ஸ்வாதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகார், வரதட்சணை கொடுமை வழக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சணையில் கிராம மக்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் பேசி சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.
மூன்று மாதங்களாக ஸ்வாதி ஒரு கால் செண்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவர் மகேந்தருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அந்த வேலையில் இருந்து அவரை நிறுத்தியிருக்கிறார். ஸ்வாதி ஆகஸ்டில் 5 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில், இருவருக்குள்ளும் தொடர்ந்து சண்டை வந்திருக்கிறது. கடந்த 22ஆம் தேதியன்று, தான் தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று அங்கு தங்கப்போவதாக ஸ்வாதி கூறியிருக்கிறார். இதற்கு மகேந்தர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் சண்டை தொடர்ந்துள்ளது.
துண்டு துண்டாக வெட்டி..
மனைவி தன் பேச்சை கேட்காததால், அவரை தீர்த்துக்கட்ட மகேந்தர் திட்டம் தீட்டியிருக்கிறார். இதற்காக, போடுபால் என்கிற இடத்திற்கு சென்று கோடாரி வாங்கியிருக்கிறார். அதை தன் வீட்டில் மறைத்தும் வைத்திருக்கிறார். ஆகஸ்ட் 23ஆம் தேதி, மாலை 4.30 மணியளவில் ஸ்வாதியை தன் வீட்டில் வைத்தே வெட்டி கொலை செய்திருக்கிறார். பின்பு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, பிரதாப சிங்காரம் என்கிற இடத்தில் உள்ள மூசி நதியில் வீசியிருக்கிறார். அவரது கீழூடலை மட்டும் தன் வீட்டில் அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் தற்போது விசாரணைக்காக சிறையில் அடைத்து இருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ