)
Crime News: தெலங்கானாவில் ஒரு கொலை வழக்கு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் இந்த கொலை வழக்கை, சந்தேகத்திற்கிடமான கொலை என வழக்குப்பதிந்த போலீசார், பின்னர் இதை திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை வழக்கமாக மாற்றினர். கைதானவர்களிடம் இருந்து 6 மொபைல்கள், தூக்க மாத்திரை, பிபி மாத்திரை உள்ளிட்ட குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
தெலங்கானாவின் கரீம் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. கதி சுரேஷ் என்ற 36 வயது இளைஞரை அவரது மனைவி, தனது நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையில், குடும்ப வன்முறை மற்றும் திருமணத்தை தாண்டிய உறவு ஆகியவற்றின் காரணமாக கதி சுரேஷை அவரது மனைவி கதி மௌனிகா கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
மௌனிகா கடந்த 9 மாதங்களுக்கு முன் பாலியல் தொழிலுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது, அப்போது அஜய் என்பவருடன் மௌனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே கதி சுரேஷ் தொடர்ந்து, மௌனிகாவிடம் பணம் கேட்டு துன்புறுத்தி உள்ளார். இதனால், மௌனிகா கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால், பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, அஜய்யின் அறிவுறுத்துதலின் பேரில் சுரேஷை கொலை செய்ய மௌனிகா முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து, மௌனிகா தன்னுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஸ்ரீஜா என்ற பெண்ணுடன் இணைந்து கொலை திட்டத்தை தீட்டி உள்ளார். தோழி ஸ்ரீஜா, மௌனிகாவுக்கு சிவ கிருஷ்ணா மற்றும் சந்தியா (எ) ராதா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். சந்தியாவும் பாலியல் தொழிலாளியாவார். சிவ கிருஷ்ணா மெடிக்கல் ஏஜென்சியின் உரிமையாளராவார். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மருந்து கொடுத்து சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
முதல் முயற்சியில், மௌனிகா அவர் சமைத்த கறி குழம்பில் 15 வயாகரா மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். ஆனால், அதில் துர்நாற்றம் அடிக்கவே சுரேஷ் அதை சாப்பிட மறுத்திருக்கிறார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மௌனிகாவும் அவரின் நண்பர்களும் வேறொரு திட்டத்தை தீட்டியுள்ளனர். சுரேஷின் குடிபானத்தில் தூக்க மாத்திரையை கலந்துகொடுத்துள்ளனர். அதன்பின் மௌனிகா தனது சேலையை வைத்து சுரேஷின் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்.
இதையடுத்து, சுரேஷின் உறவினர்களை அழைத்த மௌனிகா, உடலுறவின் போது திடீரென சுரேஷ் சுய நினைவை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே சுரேஷின் உடலை அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிசெய்துள்ளனர். இச்சம்பவத்தை சந்தேகத்திற்கிடமான மரணம் என முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போதுதான், இந்த கொலையை சுரேஷின் மனைவி மௌனிகா செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று மௌனிகா, ஸ்ரீஜா, சிவ கிருஷ்ணா, அஜய், சந்தியா (எ) ராதா, நல்லா தேவதாஸ் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் போலீசார் எடுத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ