விளம்பரத்திற்கு ₹822 கோடி; ஆக்ஸிஜன் ஆலைக்கு ₹0; அரவிந்த் கேஜரிவாலை சாடும் காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவர் திரு.அஜய் மாகேன் (Ajay Maken), மத்திய அரசை குறை சொல்லும் அதே நேரத்தில், COVID-19 தொற்றுநோய்களின் போது மக்கள் நலனிற்காக குறைந்தபட்சம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றார்.
விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, தில்லியில், ஆக்ஸிஜன் சேமிப்பு திறனை அதிகரிக்கவும், புதிய ஆலைகளை அமைக்கவும் கடந்த ஒரு வருடத்தில் எதுவுமே செய்யவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது
காங்கிரஸ் தலைவர் திரு.அஜய் மாகேன் (Ajay Maken), மத்திய அரசை குறை சொல்லும் அதே நேரத்தில், COVID-19 தொற்றுநோய்களின் போது மக்கள் நலனிற்காக குறைந்தபட்சம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றார்.
மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், எட்டு ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்க தில்லி அரசுக்கு, பிஎம் கேர்ஸ் (PM CARES) நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு ஆலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளதை குறிப்பிட்டார்.
தில்லி அரசாங்கம் கடந்த ஆண்டில் ஒரு ஆக்ஸிஜன் ஆலை கூட அமைக்கவில்லை என்பதோடு, ஆக்ஸிஜன் சேமிப்பு திறனையும் அதிகரிக்கவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் அஜய் மாகேன் (Ajay Maken) குற்றம் சாட்டினார்.
"டெல்லியில் ஏன் ஆக்ஸிஜன் ஆலைகள் அமையவில்லை, அதேசமயம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் கடந்த ஒரு வருடத்தில் அனுமதிக்கப்பட்ட 37 ஆலைகளில் 24 ஆலைகளையும், ஏழு பெரிய ஆக்ஸிஜன் சேமிப்பு ஆலைகளையும் அமைத்துள்ளன" என்று அவர் கூறினார்.
ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்
கடந்த ஆண்டில் தில்லி அரசாங்கம் விளம்பரம் மற்றும் விளம்பரத்திற்காக ₹355 கோடி செலவிட்டதாகவும், மேலும், இந்த ஆண்டுக்கான விளம்பர பட்ஜெட்டாக ₹467 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தில்லி அரசு, விளம்பரங்களுக்காக மொத்தம் ₹822 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையில், 800 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்கலாம், 750 மெட்ரிக் டன் கொள்ளளவு ஆக்ஸிஜனை சேமிக்கும் திறனை ஏற்படுத்தலாம், ஆனால் தில்லி அரசு ஒன்றும் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் அதன் விலையை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கடந்த மார்ச் மாதம அறிக்கை கூறியது என்றும் காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டினார்.
ALSO READ | Fake News: COVID-19 தொடர்பான தவறான தகவல்கள் கொண்ட ட்விட்டர் பதிவுகள் நீக்கம்?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR