மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (ஏப்ரல் 30) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவுகள் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படுள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடைபெறும். சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக பதிவு செய்யப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் எப்போதும் சாதி கணக்கெடுப்பை எதிர்த்தன. கடந்த 2010ஆம் ஆண்டில் மறைந்த மன்மோகன் சிங், சாதி கணக்கெடுப்பு விஷயத்தை அமைச்சரவையில் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். இந்த விஷயத்தை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதி கணக்கெடுப்பை பரிந்துரைத்துள்ளன. காங்கிரஸும் அதன் இந்திய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் சாதி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தி உள்ளன. சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. இருப்பினும் இதை ஒரு அரசியலாகவே பார்க்கின்றனர் என கூறினார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 30) பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ