Credit Card Apply: இந்தியாவில் வருடாந்திர கட்டணமின்றி கிடைக்கும் 4 சிறந்த கிரெடிட் கார்டுகள் – செலவுகளை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கான சிறந்த தேர்வுகள்!

இன்று கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது எளிதாகிவிட்டது. ஆனால், பல வங்கிகளில் ஒரே ஆண்டில் பல்வேறு விதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. இதனால் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். இதன் மூலம் கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் நன்மைகளையும் இழக்க நேரிடுகிறது. இந்நிலையில் வருடாந்திர கட்டணங்கள் இல்லாத கிரெடிட் கார்டுகளை பல வங்கிகள் வழங்குகின்றன. இவற்றை தேர்வு செய்வதன் மூலம் செலவுகளை கட்டுப்படுத்தும் புத்திசாலித்தனமான முடிவாக அமையும். அந்த வகையில், இந்தியாவில் வருடாந்திர கட்டணம் இல்லாத நான்கு சிறந்த கிரெடிட் கார்டுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. IDFC FIRST கிளாசிக் கிரெடிட் கார்ட்
கட்டணம்: ஆண்டு கட்டணம் மற்றும் சேர்க்கை கட்டணமில்லை.
நன்மைகள்: புதிய பயனர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள வவுச்சர், முதல் EMI வாங்கும் போது ரூ.1,000 வரை பணத்தைத் திரும்பப்பெறும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் திரைப்பட டிக்கெட்டுகளில் 25% தள்ளுபடி, எரிபொருள் செலவில் 1% மானியம், 300+ கூட்டாளி வணிகங்களில் சலுகைகள் கிடைக்கும்.
2. Amazon Pay ICICI கிரெடிட் கார்ட்
கட்டணம்: ஆண்டுக்கட்டணம் கிடையாது; புள்ளிகள் காலாவதியாகாது.
பயன்கள்: Prime உறுப்பினர்களுக்கு Amazon-ல் வாங்கும் பொருட்களுக்கு 5% ரிவார்டு, மற்ற பயனர்களுக்கு 3% மற்றும் பிற செலவுகளுக்கு 1%. மேலும் எரிபொருள் செலவுகள் மீதான சுர்சார்ஜ் விலக்கு.
3. Bank of Baroda Prime கிரெடிட் கார்ட்
கட்டணம்: ஆண்டு கட்டணம் இல்லை.
பயன்கள்: வருமான சான்றுகள் இல்லாத நபர்களுக்கு கூட வழங்கப்படும்; ரூ.15,000 டெபாசிட்டில் அடிப்படையாகக் கிடைக்கும்.
பயன்கள்: முதலில் 60 நாட்களில் ரூ.5,000 செலவழித்தால் 500 புள்ளிகள் கிடைக்கும். மேலும் ரூ.100க்கு 2 ரிவார்டு புள்ளிகள், ரூ.2,500 மேற்பட்ட செலவுகளை 6 முதல் 48 மாதம் வரை EMI ஆக மாற்றும் வசதி.
4. Axis Bank Neo கிரெடிட் கார்ட்
கட்டணம்: முதல் வருடம் கட்டணம் இல்லை; இரண்டாம் ஆண்டில் ரூ.250 வரை வசூலிக்கப்படும்.
பயன்கள்: உணவுப் பொருட்கள் டெலிவரிக்காக ரூ.120 வரை தள்ளுபடி, Paytm மூலம் ரீசார்ஜ், டி.டி.எச். செலவுகளுக்கு 5% தள்ளுபடி.
மேலும்: தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களில் ரூ.2,500 மேல் டில்லில் 15% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.500).
குறைந்த செலவில் அதிக நன்மைகளை எதிர்பார்க்கும் நபர்களுக்கு, இந்த வருடாந்திர கட்டணமில்லாத கிரெடிட் கார்டுகள் சிறந்த தீர்வாக இருக்கின்றன. ஆன்லைன் ஷாப்பிங், உணவகச் செலவுகள் அல்லது சாதாரண பயண தேவைகளுக்காக, உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற ஒரு கார்ட் கண்டிப்பாக கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ