Indian Railways: உலகளவில் ரயில்வே துறையில், இந்திய ரயில்வே துறையும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். அதாவது, உலகின் டாப் 5 ரயில்வே நெட்வோர்க்கை எடுத்தால் அதில் நிச்சயம் இந்திய ரயில்வே துறையும் ஒன்றாக இருக்கும். ஒரு நாளில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இணைக்கப்படுகின்றன, கோடிக்கணக்கான பயணிகள் தினந்தோறும் இந்திய ரயில்வேயை பயன்படுத்துகிறார்கள். இதனால், நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மூலமே பெரிய வருமானத்தை ரயில்வே துறை பெறுகிறது.
Indian Railways: நாடு முழுவதும் உள்ள 7,308 ரயில்கள்...
இந்திய ரயில்வே சுமார் 7,308 ரயில் நிலையங்களை இயக்கி வருகிறது. தினந்தோறும் சுமார் 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றனர். அதாவது, விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய், பிளாட்பார்ம் டிக்கெட் மூலம் வரும் வருவாய், கடைகள் மூலம் வருவாய் என ரயில் நிலையங்களுக்கு பல்வேறு வகையில் வருவாய் வருகின்றன.
Indian Railways: முதலிடம் எந்த ரயில் நிலையம்?
அந்த வகையில், இந்தியாவின் மிகவும் செல்வச் செழிப்பான ரயில் நிலையம் எது என்பதை இங்கு காணலாம். 2023-24 நிதியாண்டில் புது டெல்லி ரயில் நிலையம் தான் நாட்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையமாகும். அதாவது, அந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.3,337 கோடியை ஈட்டியிருக்கிறதாக ரயில்வே துறை தரப்பிலான தரவுகள் கூறுகின்றனர். வருவாய் ஒருபுறம் என்றால், அதிக மக்கள் கூடும் ரயில் நிலையமும் புது டெல்லிதான். அந்த ஓராண்டில் அங்கு 39 கோடியே 3 லட்சத்து 62 ஆயிரத்து 272 பயணிகள் புது டெல்லி ரயில் நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.
Indian Railways: அடுத்த நான்கு செல்வச் செழிப்பான ரயில் நிலையங்கள்
இதில் அதிக வருவாய் ஈட்டும் இரண்டாவது ரயில் நிலையம் என்றால் கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையமாகும். இங்கு 2023-24 நிதியாண்டில் மட்டும் 1,692 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. அங்கு 61 கோடி பயணிகள் ஓராண்டில் பயன்படுத்துகின்றனர்.
மேலும், இந்த லிஸ்டில் மூன்றாவது இடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமாகும். அதாவது, 2023-24 நிதியாண்டில் சுமார் 1,299 கோடி ரூபாயை வருவாயாக பெற்றது. பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய முக்கிய நகரங்களுடன் சென்னையும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்டில் 4வது இடத்தில் இருப்பது செகந்திராபாத் ரயில் நிலையம். தெலங்கானா மாநிலத்தில் உள்ள இந்த ரயில் நிலையம் வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை இணைக்கும் முக்கிய ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம் ஓராண்டில் சுமார் ரூ.1,276 கோடியை வருவாயாக பெற்றுள்ளது. 27.7 மில்லியன் பயணிகள் இங்கு ஓராண்டில் பயணித்துள்ளனர்.
5வது இடத்தில் பீகார் தலைநகர் பாட்னா ரயில் நிலையம் உள்ளது. 2023-24 நிதியாண்டில் பாட்னா ரயில் நிலையம் 689 கோடி ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது இந்த ரயில் நிலையம். தினமும் 2 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.
மேலும் படிக்க | ரயில் விதிகளில் மிகப்பெரிய மாற்றம்! பெண்களுக்கு கேட்காமலே சீட் கிடைக்கும்
மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. பெண்களுக்கு சிறப்பு சலுகை.. வந்தது புதிய விதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - @ZEETamilNews ட்விட்டர் - @ZeeTamilNews டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ