ஆதவனை ஆராய புறப்பட்ட ஆதித்யா L-1! 14.85 கோடி கிமீ தொலைவு... 15 லட்சம் கிமீ பயணம்!

Aditya-L1 Solar Mission: ஆதித்யா-எல்1 இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 2, 2023, 12:33 PM IST
  • இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியன் வரை செல்லாது.
  • சூரியனில் இருந்து 14.85 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஆராயும்.
  • சூரியனை ஆய்வு செய்ய 7 பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆதவனை ஆராய புறப்பட்ட ஆதித்யா  L-1! 14.85 கோடி கிமீ தொலைவு... 15 லட்சம் கிமீ பயணம்! title=

Aditya-L1 Solar Mission: நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற, இந்தியா தற்போது சூரியனை நோக்கி ஆதித்யா என்ற விண்கலத்தை செலுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் சோலார் மிஷன் 'ஆதித்யா-எல்1'  இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் இஸ்ரோவின் ஆதித்யா-எல்1 மிஷன் சூரியனில் இறங்காது. பூமியிலிருந்து சூரியனின் தூரம் சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர்கள். ஆதித்யா-எல்1 மிஷன் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 அதாவது லாக்ரேஞ்ச் பாயின்ட் 1க்கு செல்லும். இந்த இடத்திலிருந்து சூரியனின் தூரம் 14.85 கோடி கிலோமீட்டர்கள். ஆதித்யா-எல்1 இந்த லக்ரேஞ்ச் புள்ளியில் இருந்து சூரியனை ஆய்வு செய்யும். இங்கு செல்வதற்கு 4 மாதங்கள் (சுமார் 127 நாட்கள்) ஆகும்.

L1 அதாவது Larange Point One என்றால் என்ன?

இந்த பணி குறித்து மக்கள் மனதில் எழும் இரண்டாவது கேள்வி என்னவென்றால், இது என்ன லாக்ரேஞ்ச் புள்ளி? உண்மையில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரு நேர்கோட்டில் அமைந்திருக்கும் விண்வெளியில் உள்ள ஒரு இடம். இந்த புள்ளி பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சூரியனுக்கு என்று அதன் சொந்த ஈர்ப்பு விசை உள்ளது. அதே போல் பூமிக்கும் அதன் சொந்த ஈர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசை முடிவடைந்து சூரியனின் ஈர்ப்பு விசை தொடங்கும் விண்வெளி புள்ளி, இந்த புள்ளி லாக்ரேஞ்ச் புள்ளி என்று அழைக்கப்படுகிறது. மிஷன் ஆதித்யா-எல்1 இந்த இடத்தில் பயன்படுத்தப்படும்.

இரு கோள்களின் ஈர்ப்பு விசைக்கு இடையில் ஆதித்யா-எல்1

பூமி மற்றும் சூரியன் இரண்டின் ஈர்ப்பு வரம்புகள் காரணமாக, எந்தவொரு சிறிய பொருளும் நீண்ட காலத்திற்கு அங்கேயே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. ஆதித்யா-எல்1 (Aditya L1) இரு கோள்களின் ஈர்ப்பு விசைக்கு இடையில் நிலை நிறுத்தப்படும். இது ஆதித்யா-எல்1 இன் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும், என்பதோடு, அதிக நேரம் வேலை செய்யும் திறனையும் ஆதித்ட்யா பெறும். ஃபோட்டோஸ்பியர் என்று அழைக்கப்படும் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சற்று மேலே, அதன் வெப்பநிலை சுமார் 5500 டிகிரி செல்சியஸ் ஆகும். அதே நேரத்தில், அதன் மையத்தின் அதிகபட்ச வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த விண்கலமும் அங்கு செல்வது சாத்தியமில்லை. எனவே ஆதித்யா-எல்1 லாக்ரேஞ்ச் புள்ளியில் நிலை நிறுத்தப்படும். அங்கிருந்தபடி ஆய்வுகளை மேற்கொள்ளும்.

மேலும் படிக்க | ஆதித்யா எல்1 திட்டம் எதற்கு...? - ஈஸியாக விளக்கிய மயில்சாமி அண்ணாதுரை

ஆதித்யா-எல்1  செய்யும் பணிகள்

ஆதித்யா-எல்1 சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம் மற்றும் அனல் காற்றைப் படிக்கும்.  இதனுடன், சூரியக் காற்றின் பரவல் மற்றும் வெப்பநிலை குறித்தும் ஆய்வு செய்யப்படும். இது தவிர, சூரிய வளிமண்டலத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பார். இந்த விண்கலம் மொத்தம் ஏழு உபகரணங்களைச் சுமந்து செல்லும். ஃபோட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் என அறியப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை, மின்காந்த மற்றும் துகள் புலங்களைக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்திக் கண்காணிக்கும். ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை (கொரோனா) வெவ்வேறு அலை பட்டைகளில் கண்காணிக்க ஏழு பேலோடுகளைக் கொண்டுள்ளது. நமது வளிமண்டலத்தால் தடுத்து நிறுத்தப்படும் கதிர்வீச்சையும் இது ஆய்வு செய்யும். இதனை பூமியிலிருந்து ஆய்வு செய்ய முடியாது.

மேலும் படிக்க | சூரிய புயல்களை கண்டறிவது உள்ளிட்ட வான் ஆராய்ச்சிக்காக இந்தியாவின் ஆதித்யா எல் 1 தயார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News