)
IRCTC Train Ticket: இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். குறிப்பாக தொலைதூர பயணத்திற்கு மட்டுமல்லாமல் 2, 3 மணி நேர பயணமாக இருந்தாலும் மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். காரணம் வசதியாக களைப்பின்றி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்பதனால்தான். இதனாலேயே ரயில் முன்பதிவில் அவ்வளவு நெருக்கடி உள்ளது. சாதாரண முன்பதிவை தாண்டி தக்கலிலும் முண்டியடித்து பயணிகள் டிக்கெட் எடுக்க முற்படுகின்றனர்.
கட்டணமின்றி தேதியை மாற்றலாம்
ஒரு சிலருக்கு முதலில் திட்டமிட்டபடி பயண தேதி அமைவதில்லை. அவர்கள் பயண திட்டத்தை மாற்ற ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு அதன்பிறகு புதிதாக ஒரு டிக்கெட்டை எடுக்க வேண்டும். நேரடியாக முன்பதிவு செய்த டிக்கெட் தேதியை மாற்ற முடியாது. இந்த நிலையில்தான், வரும் ஜனவரி மாதம் முதல் ரயில் முன்பதிவு டிக்கெட் தேதியை எந்த கட்டணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. ஆதாவது ஒருவேளை நீங்கள் திட்டமிட்டபடி பயணம் அமையாமல் மாற்றம் ஏற்படும் நிலையில், நீங்கள் அந்த தேதிக்கு முன்பதிவு டிக்கெட்டை மாற்ற விடும்பும் பட்சத்தில் அந்த தேதியில் இருக்கை கிடைக்குமா? என்ற கேள்வி உள்ளது. நீங்கள் மாற்ற விரும்பும் தேதியில் ரயிலில் காலியாக இருக்கும் இருக்கைகளை பொறுத்தே உங்களுக்கு இருக்கை கிடைக்கும். அதேபோல், மாற்றும்போது அந்த இருக்கையில் கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த வேறுபாட்டை செலுத்த வேண்டி இருக்கும். இந்த நடைமுறை வரும் ஜனவரி மாதம் முதல் வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை?
தற்போதைய ரயில்வே விதிகளின்படி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ரத்து செய்தால், பயண கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதுவே ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் அட்டவணை தயார் செய்வதற்கு முன்பு வரை அதாவது 4 மணி நேரம் வரை ரத்து செய்தால், டிக்கெட் பயண கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் வரை பிடித்தம் இருக்கக்கூடும். ஒருவேளை முன்பதிவு சார்ட் தயார் ஆகிவிட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது. இதுவே தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகள் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ