Indian Railways: இந்தியாவில் ரயில்வே கட்டணங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Indian Railways: இந்தியாவில் ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தினசரி ரயிலில் தான் பயணம் செய்கின்றனர். போக்குவரத்திற்கு எளிதாகவும், வேகமாகவும் ,அதே சமயம் குறைந்த விலையிலும் இருப்பதால் பல மக்கள் ரயிலில் பயணிக்க விரும்புகின்றனர். இந்திய ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் விலையை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ரயில்வே கட்டணங்களை உயர்த்தும் 1அபாயம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஏசி அல்லாத பெட்டிகள் மற்றும் அதிவிரைவு ரயில்களின் டிக்கெட் விலை ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா உயர உள்ளதாக கூறப்படுகிறது.

ரயில்வேயை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவிக்கையில், தினசரி 13,000 ஏசி இல்லாத பெட்டிகளும், அதிவிரைவு ரயில்களும் இந்தியா முழுவதும் இயக்கப்படுகின்ற. விரைவில் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வால் இந்திய ரயில்வேக்கு கணிசமான லாபம் கிடைக்கும். அதே சமயம் ஏசி பெட்டிகளுக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த புதிய கட்டண உயர்வு பயணிகளுக்கு பெரிய பாதிப்பாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கான ரயில்வே பாஸ் வாங்குவதிலும் எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வேயின் வசதிக்காகவே இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்திய ரயில்வேயின் இந்த கட்டண உயர்வில் சில புதிய வரம்புகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பயணி சாதாரண பெட்டியில் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தால் கூடுதல் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை, கிலோ மீட்டருக்கு அரை பைசா மட்டுமே கூடுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு பயணி சாதாரண பெட்டியில் 600 கிலோ மீட்டர் பயணம் செய்கிறார் என்றால் கிலோ மீட்டருக்கு 50 பைசா மட்டுமே அவரது டிக்கெட் விலையில் அதிகரிக்கப்படும்.
இந்தியன் ரயில்வேயில் அடிக்கடி பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு ஆதார் வெரிஃபிகேஷன் கட்டாயம் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. தட்கல் டிக்கெட்களை புக் செய்ய முடியவில்லை என்று பயணிகள் தெரிவித்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தங்களது ஆதார் நம்பரை அப்டேட் செய்து வெரிஃபிகேஷன் செய்துள்ள பயணிகளால் மட்டுமே தட்கல் டிக்கெட்களை புக் செய்ய முடியும். அதே போல இனி ஐஆர்சிடிசி ஆப் மூலமாக மட்டுமே தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும். மேலும் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது ஆதார் வடிவிலான otp-யும் இனி கேட்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ