சபரிமலை கோயில் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக திருவாங்கூர் தேவசம்போர்டு நாளை கூட்டம்....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது. உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தமிழகத்தலும் பிறந்து வலுப்பெற்று வருகிறது. 


இந்நிலையில், சபரிமலை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற இறுதிக்கட்ட முயற்சியில் கேரள அரசு இறங்கி உள்ளது. இதற்காக தந்திரி குடும்பத்தினர், பந்தள அரண்மனை பிரதிநிதிகள், ஐயப்பா சேவா சங்க தலைவர்கள் ஆகியோரை வரும் அக்டோபர் 16 ஆம் தேதி (நாளை) நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைப்பு விடுத்துள்ளது. 



இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், பழங்கான பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை மாற்ற நாங்கள் நினைக்கவில்லை. சபரிமலை பாரம்பரிய நம்பிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கவே விரும்புகிறோம். அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். சபரிமலை விவகாரத்தை அரசியல் பிரச்னையாக்க தேவசம் போர்டு விரும்பவில்லை. எந்த நிபந்தனையும் இல்லாமல் தந்திரி குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த ஆண்டு சீசனுக்கு வரும் பக்தர்கள் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பேச்சுவார்த்தை என தெரிவித்துள்ளார். 


இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு முன்பாக நடத்திய பேச்சுவார்த்தைக்கு தந்திரி குடும்பத்தினரையும், பந்தள மன்னர் குடும்பத்தினரையும் அழைத்த போது அவர்கள் வர மறுத்தது குறிப்பிடத்தக்கது..!