ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜோரி (Rajouri) மாவட்டம், நவ்ஷரா (Nowshera) பிரிவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த ராணுவ வீரர்கள், காரி திரயாட் காட்டுப் பகுதியில் தீவிவாதிகளை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதல் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. 


இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்று வரும் இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இரெண்டு இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.