)
Mumbai Rains News: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரில் தொடர்ந்து 3வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அந்தேரிம் காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் பல வெள்ளத்தால் மூழ்கி உள்ளன.
மும்பை பெருநகரில் பெரும்பாலான மக்கள் உள்ளூர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கனமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில், உள்ளூர் ரயில்கள் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மும்பை, தானே, ராய்காட் போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக இதுவரை இரண்டு பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் கனமழை பெய்து வரும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரனமாக நகர் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், அத்தியாவசிய தேவைகள் தவிர, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் தேவைகள் இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நிர்வாக ஆலோசனைகளுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ