ஒடிசா மாநிலம் பாரிபடாவில் அதிக விஷத்தன்மை கொண்ட ரஸ்ஸல் வைப்பர் வகை பாம்புகள் பிடிப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலம் மயுர்பஹஜ் மாவட்டத்தில் உள்ள பாரிபடா சிறை வளாகத்தில் அதிக நச்சுத் தன்மை கொண்ட ரஸ்ஸல் வைப்பர் வகை பாம்புகள் இரண்டு பிடிப்பட்டுள்ளது. சிறை அதிகாரி தகவலின் படி பிடிப்பட்ட பாம்பில் ஒன்று ஆண் எனவும், மற்றொன்று பெண் எனவும் தெரிகிறது. சுமார் 4.5 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகளும் சுமார் 4 கிலோ எடை கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



சிறை கைதிகளின் நலன் கருதி பாம்பினை கண்டதும் சிறை அதிகாரிகள் மீட்பு குழுவினை அழைத்துள்ளனர். மீட்பு குழுவினரின் உதவியுடன் பிடிக்கப்பட்ட பாம்புகளினை அதிகாரிகள் அருகில் இருந்த வனப்பகுதியில் விட்டுள்ளனர்.


ரஸ்ஸல் வைபர் வகை பாம்புகள் சந்திரபோடா எனவும் அழைக்கப்படுகிறது. உலகின் மிக விசத்தன்மை கொண்ட பாம்புகளின் பட்டியலில் இந்த சந்திரபோடா பாம்புகள் முக்கியமானவை. உலகளவில் பாம்பு கடியால் இறக்கும் மனிதர்களில் பெரும்பாண்மை எண்ணிக்கை சந்திரபோடா பாம்புகளாலே ஏற்படுகிறது.