மத்திய அரசு வழங்கும் உத்யோகினி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்கப்படுகிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வதற்கும், யாருடைய தயவும் இல்லாமல் வாழ்வதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. பெண்கள் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறும் நோக்குடன், மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உத்யோகினி (Udyogini) திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். இது பெண்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு முக்கிய முயற்சி எனலாம்.
உத்யோகினி திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட தொழில்களுக்கு ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 3 லட்சம் வரை கடன் பெற முடியும். இதற்கான முக்கிய நிபந்தனை, கடன் பெறும் பெண் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதாகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்குள் இருந்தால் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். தனியாக வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு விதிக்கப்படவில்லை. இதில் மற்றொரு சிறப்பு அம்சம், இதற்கு முன்பு வாங்கிய கடன்களை சரியாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய கடன் வழங்கப்படும்.
சிறப்பு பிரிவில் சேரும் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் கடனில் 90% வரை மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, அவர்கள் ரூபாய் 2.1 லட்சம் திருப்பி செலுத்தினாலே போதும். வட்டியில்லா கடன் என்பதால், கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கின்றனர். இந்த திட்டத்தை வணிக வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அரசு அங்கீகரித்த பயிற்சி நிலையங்கள் மூலம் பெண்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கு உத்தரவாத ஆவணங்கள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை
பெண்கள் இந்த திட்டத்திற்கு அருகிலுள்ள வங்கிகள் அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அதற்காக தேவையான ஆவணங்கள்
* ஆதார் அட்டை
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
* பிறப்புச் சான்றிதழ்
* முகவரி மற்றும் வருமானச் சான்றிதழ்கள்
* ரேஷன் அட்டை / BPL அட்டை
* சாதிச் சான்றிதழ்
* வங்கி பாஸ் புக் நகல்
உத்யோகினி திட்டம் பெண்கள் வாழ்க்கையில் புதிய மாற்றத்துக்கான வாய்ப்பாக உள்ளது. தொழில்முனைவோராக மாற விரும்பும் அனைத்து பெண்களும் இந்த திட்டத்தின் வாயிலாக லாபம் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ