Udyogini Yojana Scheme: பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் உத்யோகினி. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் மற்றும் வருமான ரீதியாக பின் தங்கியுள்ள பெண்களுக்கு தொழில் தொடங்க அரசு கடன் வழங்குகிறது. சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் இருந்தும் பணம் இல்லாமல் தவிக்கும் ஏழைப் பெண்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக வட்டிக்கு பணம் வாங்கி தொழில் நடத்த முடியாத நிலையில் உள்ள பெண்களுக்கு உத்யோகினி திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரை செல்கிறீர்களா ? முக்கிய உத்தரவு.. மக்களே எச்சரிக்கை
சலுகை என்ன?
மத்திய அரசின் உத்யோகினி திட்டத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வட்டி இல்லாத கடன் வழங்கப்படுகிறது. மேலும் உத்யோகினி திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் திருப்பி செலுத்தும் போது பாதி பணத்தை செலுத்தினால் போதும், மீதி தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏழைப் பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமல், சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த சலுகைகளை வழங்குகிறது. குடிசைத் தொழில்கள், சோப்பு தயாரிப்பது, பரிசோதனை மையங்கள், பார்லர் தையல் கடைகள், ரீசார்ஜ் கடைகள், மண்பாண்டம் செய்தல் போன்ற பல்வேறு சிறு தொழில்களுக்கு உத்யோகினி திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
உத்யோகினி திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் 1.50 இலட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும். அதே போல வங்கிகளில் நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும். இந்த தகுதியை பூர்த்தி செய்தால் உடனே கடன் கிடைக்கும்.
ஏற்கனவே வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் அதற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக தொழில் தொடங்க இருந்தால் அந்த திட்டம் பற்றிய விரிவான அறிக்கையை கொடுக்க வேண்டும். என்ன மாதிரியான தொழில் தொடங்க உள்ளீர்கள்? இதற்கு எவ்வளவு செலவாகும்? வருமானம் எவ்வளவு கிடைக்கும்? போன்ற விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியல் இன மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் அதிகபட்சம் மூன்று லட்சம் வரை கடன் கிடைக்கும், இதில் 50 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். மற்ற பிரிவுகளை சேர்ந்த பெண்களுக்கு அதிகபட்சம் 30 சதவீத தள்ளுபடியுடன் 3 லட்சம் வரை கடன் கிடைக்கும், இதற்கு வட்டி சதவீதம் 8 முதல் 12 வரை இருக்கும்.
மேலும் படிக்க | விமானிகளுக்கும் ஓய்வு வயது உண்டா? இந்த வயதுக்கு மேல் அனுமதி இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ