)
Man Molests And Kills Sister On Raksha Bandhan : சமீபத்தில் ராக்கி பண்டிகை முடிந்தது. இந்த பண்டிகை தினத்தில், சகோதர்களுக்கு பெண்கள் ராக்கி கட்டி, அவர்களின் ஆயுளுக்காக பிரார்த்தனை மற்றும் பூஜை செய்வதுண்டு. ஆனால், இங்கு ஒரு அண்ணன் தனது தங்கையை, ராக்கி கட்டிய சில மணி நேரங்களில் சீரழித்து கொன்றிருக்கிறார். இது குறித்த முழு தகவல், இங்கே…
என்ன நடந்தது?
இந்த சம்பவமானது, உத்திர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. 33 வயதான நபர் ஒருவர்தான் இந்த சம்பவத்தை செய்திருக்கிறார். அந்த நபர், தனது 14 வயது தங்கை முறை வரும் உறவுக்கார குழந்தைக்கு இந்த கொடூரத்தை செய்திருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை அன்று நடந்த இந்த சம்பவம், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 33 வயதான சுர்ஜீத் என்கிற அந்த நபர், தனது உறவினர் வீட்டிற்கு ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்றிருகிறார். அங்கு ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள் நடந்திருக்கிறது. சுர்ஜீத்தின் தங்கைக்கு ராக்கியும் கட்டப்பட்டிருக்கிறது.
அதே இரவில், அதிகமாக குடித்த சுர்ஜீத், வீட்டிற்குள் சென்று தனது 14 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு, அவரை கொன்று, உடலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் செட்-அப் செய்திருக்கிறார்.
இறந்த குழந்தையின் தந்தை வேறு ஒரு அறையில் உறங்கியிருக்கிறார். அவருக்கு, எந்தவித சத்தமும் கேட்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் இன்னொரு டீன்-ஏஜ் சிறுவன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நாடகமாடினார்..
கொலை செய்த சுர்ஜீத், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக கொலையை தற்கொலை போல காண்பித்திருக்கிறார். ஆனால், போலீஸாருக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில் சந்தேகம் எழுந்திருக்கிறது. அவர்கள் வீட்டை தீவிரமாக ஆராய்ந்ததில் ஆங்காங்கே ரத்தக்கறை இருந்ததை பார்த்திருக்கின்றனர். இதை வைத்து குடும்பத்தினரை விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இப்படி விசாரிக்கும் போது, வேறு யாரிடமாவது கேள்வி கேட்டால் கூட அதற்கு சுர்ஜித் பதில் சொல்லியிருக்கிறார். இது, போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
இதற்கிடையில் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு போலீசார் அனுப்பியிருக்கின்றனர். இதில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. சுர்ஜீத்திடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், அவர் தான் இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இன்னும் தீவிர விசாரணை நடந்து வருவதாக குறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ