)
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்பும் செயல்முறை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எந்த ஒரு பொருள் வாங்கினாலும் கையில் பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் மாறி, யுபிஐ மூலம் பணத்தை அனுப்பும் பழக்கம் இளைஞர்கள் முதல் பெரியவர் இவரை அதிகரித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் கையில் பணமாக வைத்து செலவழிப்பவர்களை விட, ஆன்லைனில் பணத்தை அனுப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அதன் காரணமாக பூக்கடை முதல் மிகப்பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை முக்கியமானதாக மாறி உள்ளது. நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் UPI வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில் பெரிய பரிவர்த்தர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வங்கிகள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு குறிப்பாக ரூபாய் 40 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த கட்டணங்களை முதலில் கொண்டு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய பரிவர்தனைகளுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படலாம் என்றும், சிறிய பரிவர்தனைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிஜிட்டல் கட்டண சேவைகளை வழங்க, வணிகர்களிடம் இருந்து வங்கிகள் MDR (Merchant Discount Rate) மூலம் கட்டணம் வசூலித்தனர். இதில் RuPay டெபிட் கார்டு மற்றும் UPIக்கு கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. MDR தொடர்பான விதிகளில் மாற்றங்களை கொண்டு வர சமீபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. MDR நீக்கப்பட்டதன் காரணமாக UPI பயன்பாடு அதிகரித்தது. இதனால் மக்கள் அதிகம் பயனடைந்தாலும் வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டண சேவை வழங்குபவர்களுக்கு வருவாய் குறைந்தது. கடந்த ஆண்டு இந்தியாவில் UPI மூலம் கிட்டத்தட்ட 20,787 கோடியை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் வெறும் ரூ.5.86 லட்சம் கோடியாக இருந்த UPI பரிவர்த்தனை, கடந்த ஆண்டு ரூ.246.83 லட்சம் கோடியாக மாறி உள்ளது. இதன் மூலம் UPI பரிவர்த்தனை இந்தியாவில் எவ்வளவு முக்கியமானதாக மாறி உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். நாட்டில் உள்ள 60 லட்சம் வணிகர்கள் UPI மூலம் பணத்தை பெறுகின்றனர் என்றும், இதில் 90 சதவீதம் சிறு நிறுவனங்களாக உள்ளனர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சிறு வணிகர்கள் அல்லது அன்றாட பயனர்களை பாதிக்காமல் MDR கட்டணங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ