UPSC தேர்வு: இந்திய அளவில் டாப் 5 இடத்தை பிடித்தவர்கள் யார் யார்? தமிழ்நாட்டில் யார் முதலிடம்?

UPSC CSE Exam 2024 Result: 2024ஆம் ஆண்டு UPSC குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் யார் யார், தமிழ்நாட்டில் முதலிடம் யார் என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 22, 2025, 04:35 PM IST
  • குடிமைப்பணி தேர்வு மூன்று நிலைகளில் நடக்கும்.
  • மூன்றிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
  • தரவரிசைப் பட்டியலில் 1009 பேர் இடம்பெற்றுள்ளனர்.
UPSC தேர்வு: இந்திய அளவில் டாப் 5 இடத்தை பிடித்தவர்கள் யார் யார்? தமிழ்நாட்டில் யார் முதலிடம்?

UPSC CSE Exam 2024 Final Result: 2024ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வின் (CSE) இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) இன்று வெளியிட்டுள்ளது. குடிமைப்பணி தேர்வுகள் மூன்று நிலைகளில் நடைபெறும். 

Add Zee News as a Preferred Source

கடந்தாண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முதல்நிலைத் தேர்வு (Preliminary), முதன்மைத் தேர்வு (Mains) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேர்காணல் (Interview) நடைபெற்றிருந்தது. இந்நிலையில், இந்த மூன்று நிலைகளிலும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

UPSC Exam Result: டாப் 5இல் 3 பேர் பெண்கள் 

இந்நிலையில், மொத்தம் 1009 வேட்பாளர்களின் பெயர்கள் தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தரவரிசைப் பட்டியல் UPSC அதிகாரப்பூர்வ வலைத்தளமான upsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த சக்தி தூபே என்ற பெண்மணி முதலிடத்தை பெற்றுள்ளார். மேலும், இதில் டாப் 5 இடங்களை பிடித்தவர்கள் மூன்று பேர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பெங்களூருவில் இந்திய விமானப்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கன்னட கும்பல்.. வீடியோ!

அந்த வகையில், 2024 குடிமைப்பணி தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம். அதற்கு முன் தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பிடித்தவர் யார் என்பதை இங்கு காணலாம்.

UPSC Exam Result: தமிழ்நாட்டில் யார் டாப்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் தரவரிசையில் 23ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். குறிப்பாக, இவர் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் போட்டித் தேர்வுகள் பிரிவு மூலம் பயிற்சி பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பாகும். இதேபோல் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மோனிகா தமிழ்நாடு அளவில் 2வது இடத்தையும், இந்திய அளவிலான தரவரிசையில் 39வது இடத்தை பெற்றுள்ளார்.

UPSC Exam Result: முதலிடம் - சக்தி துபே

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த சக்தி துபே குடிமைப்பணி தேர்வின் அகில இந்திய அளவிலான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் பட்டம் பெற்றுள்ள இவர் தேர்வில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாக எடுத்துள்ளார்.

UPSC Exam Result: இரண்டாமிடம் - ஹர்ஷிதா கோயல்

குடிமைப்பணி தேர்வின் இந்திய அளவிலான தரவரிசையில் 2வது இடத்தை ஹர்ஷிதா கோயல் பிடித்துள்ளார். ஹர்ஷிதா ஹரியானாவில் பிறந்தவர் என்றாலும், குஜராத்தின் வதோதராவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் சி.ஏ. பட்டம் பெற்றவர். ஹர்ஷிதா தலசீமியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அகமதாபாத்தின் நம்பிக்கை அறக்கட்டளையில் பணியாற்றி உள்ளார்.

UPSC Exam Result: மூன்றாமிடம் - அர்ச்சித் பராக் டோங்ரே

குடிமைப் பணித் தேர்வில் மூன்றாமிடம் பிடித்த இவர் தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள விஐடியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் இளங்கலை தொழில்நுட்பம் பட்டம் பெற்றுள்ளார். தத்துவம் இவரது விருப்பப் பாடங்களில் ஒன்று.

UPSC Exam Result: 4வது இடம் - மார்கி சிராக் ஷா

குடிமைப்பணித் தேர்வில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் இவர் அகமதாபாத்தில் உள்ள குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். சமூகவியலை விருப்பப் பாடமாக எடுத்துள்ளார். 

UPSC Exam Result: 5வது இடம் - ஆகாஷ் கார்க்

டெல்லியைச் சேர்ந்த குரு கோபிந்த் சிங் என்பவரே குடிமைப்பணி தேர்வின் அகில இந்திய தரவரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளார். டெல்லி இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை தொழில்நுட்ப பட்டம் பெற்ற இவர், சமூகவியலை விருப்பப் பாடமாக எடுத்துள்ளார். 

மேலும் படிக்க | 10 வயதினரும் இனி சுதந்திரமாக வங்கி கணக்கு திறக்கலாம்; நோ மினிமம் பேலன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News