UPSC CSE Results 2025, Women Achievers: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2025 குடிமைப் பணித் தேர்வுக்கான (CSE) முடிவுகளை கடந்த வெள்ளி அன்று (மார்ச் 6) வெளியிட்டது. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், மத்திய சேவைகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கு மொத்தம் 958 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
299 பேர் பெண்கள்
வழக்கத்தை போல், மகளிர் தேர்வர்கள் இந்தாண்டிலும் குடிமைப் பணித் தேர்வில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர், கணிசமான இடங்களையும் மகளிர் பெற்றுள்ளன. மொத்தம் தேர்ச்சி அடைந்த 958 பேரில், 299 பேர் மகளிர் என்பது கவனிக்க வேண்டியது.
டாப் இடங்களை பிடித்த பெண்கள்
மதுரையை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே என்ற பெண்மணிதான் அகில இந்திய அளவில் 2வது இடத்தை பிடித்தார். மேலும், ஜின்னியா அரோரா (6வது இடம்), ஆஸ்தா ஜெயின் (9வது இடம் ) என மொத்தம் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களில் பெண்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும், 2025 தேர்வில் முதல் 25 இடங்களில் 11 பேர் பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
சமூக வாரியான விவரங்கள்
2025 குடிமைப் பணித் தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களின் சமூக வாரியான விவரங்களையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான 958 பேரில் 317 பேர் பொது பிரிவினர், 104 பேர் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS), 306 பேர் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC), 158 பேர் பட்டியல் சமூகத்தினர் (SC), 73 பேர் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆவர்.
தமிழகத்தில் டாப் 3 யார்?
தமிழ்நாட்டில் இருந்து 56 பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ராஜேஸ்வரி சுவே (2வது), ஏ.ஆர். ராஜா மொஹைதீன் (7வது), ஸ்ருதி.ஆர் (18வது) ஆகிய மூன்று பேர் டாப் ரேங்க் பெற்றுள்ளனர். 56 பேரில் பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள்.
யார் இந்த ராஜேஸ்வரி சுவே?
UPSC தேர்வில் 2வது இடம்பெற்ற ராஜேஸ்வரி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர், ராஜேஸ்வரி ஏற்கெனவே UPSC தேர்வில் மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார். மேலும் அவர் டிஎன்பிஎஸ் தேர்வில் கவனம் செலுத்தி வந்த நிலையில், UPSCஇல் தேர்வில் பெரிய வெற்றியை குவித்திருக்கிறார். அவர் துணை ஆட்சியராக இருக்கும் காரணத்தால், தேர்வில் வரும் கேள்விகளுக்கு தத்துவார்த்த ரீதியில் பதிலளிப்பதை தவிர்த்து, நடைமுறை சார்ந்த பதில்களை அளிக்க முடிந்தது என்றார்.
ராஜேஸ்வரியின் தந்தை முருகதாஸ் மின்சார உபகரணம் சார்ந்த தொழிலை செய்து வருகிறார். மேலும், தாயார் நாகராணி தனியார் கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், தற்போது ஐஏஎஸ் பொறுப்பை பெற இருக்கும் ராஜேஸ்வரி, ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக அரசின் திட்டங்கள் மக்களை சரியான வகையில் சென்றடையும்படி சேவை வழங்கும் நடைமுறைகளை மேம்படுத்த விரும்புகிறேன்" என்றார்.
பலசரக்கு கடைக்காரரின் மகள் 9வது இடம்
அகில இந்திய அளவில் 6வது இடத்தை பிடித்த ஜின்னியா, ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் பகுதியை சேர்ந்தவர் ஆவார். ஆனால் இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவரது தந்தை ராஜீவ் குமார் மற்றும் தந்தை அஞ்சனா அரோரா ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஆவர். அதேபோல், அகில இந்திய அளவில் 9வது இடத்தை பிடித்த ஆஸ்தா ஜெயின், குஜராத்தின் கண்டலா பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை அஜய் குமார் ஜெயின் அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு அருகே சிறு பலசரக்கு கடையை நடத்தி வருபவர் ஆவார். அந்த கடையின் வருமானம் மட்டுமே அவர்கள் குடும்பத்தினரின் முதன்மையான வருமானமாகும்.
மேலும் படிக்க | தமிழக அரசு வழங்கும் மாதம் ரூ.7000 உதவித்தொகை! யார் யார் பெறலாம்?
மேலும் படிக்க | பெண்மையின் வெற்றிப் பயணம்: மகளிர் தினத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









