)
US Citizen Killed In India : அமெரிக்காவை சேர்ந்த 71 வயது பெண், ருபிந்தர் கௌர் பந்தேர். இவர், 75 வயதான வெளிநாட்டு வாழ் இந்தியர் சந்திரஜித் சிங் க்ரேவால் என்பவரை திருமணம் செய்வதற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில், அவருக்கு நேர்ந்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடந்தது என்ன?
அமெரிக்க சிட்டிசனான ருபிந்தர், வெளிநாட்டு வாழ் இந்தியர் (இங்கிலாந்து) சந்திரஜித் என்கிற 75 வயது நபரை திருமணம் செய்வதற்காக சியாட்டில் நகரில் இருந்து கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இவர் வந்தது, பஞ்சாப்பின் லூதியானா எனும் பகுதிக்கு. இவர் கொல்லப்பட்டது, ஜூலை மாதம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதில் மறைந்திருக்கும் உண்மை சமீபத்தில்தான் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. முதலில், இப்பெண் காணாமல் போனதாகத்தான் லூதியானா காவல் துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கொலையான பெண்ணின் சகோதரி, கடந்த ஜூலை 24 அன்று ருபிந்தருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. இது, அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, புது டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து போலீஸார் இந்த கேஸை கையில் எடுத்துள்ளனர்.
காவல்துறை விசாரணை!
ருபிந்தர் காணாமல் போனது குறித்து விசாரித்ததில், கடந்த வாரம்தான் அவர் உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது. இதில், சுக்ஜீத் சோனு என்கிற நபரை போலீஸார் தீவிரமாக விசாரித்திருக்கின்றனர். அவர், ருபிந்தரை திருமணம் செய்ய இருந்த சந்திரஜித்தான் தன்னை கொலை செய்யுமாறு குறியதாகவும், அவர் சொன்னபடியே செய்து ஸ்டோர் ரூமில் அந்த உடலை அவர் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலையை செய்வதற்காக, ரூ.50 லட்சம் தனக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
கொலைக்கான காரணம் என்ன?
இந்த கொலைக்கான காரணம், பணம்தான் என்று போலீஸார் தெரிவித்து இருக்கின்றனர். இந்தியாவிற்கு வரும் முன், கொலையான பெண், தன்னை திருமணம் செய்யப்போகும் சந்திரஜித்திற்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இப்போது சந்திரஜித் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் பணியில் இறங்கி இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்து இருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ