Yogi Adityanath Latest Interview: இந்திய செய்தி முகமையான ANI நிறுவனம் தற்போது, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் நேர்காணல் செய்திருந்தது. இந்த நேர்காணலில் இந்துக்களின் மதச்சகிப்புத்தன்மை குறித்து அவர் பேசியிருந்தார்.
Yogi Adityanath: 'இஸ்லாமியர்கள் மத்தியில் இந்துக்கள்...'
அந்த பேட்டியில் பேசி யோகி ஆதித்யநாத்,"100 இந்து குடும்பங்களின் மத்தியில் ஒரு இஸ்லாமிய குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக மத சடங்குகளை செய்ய இயலும். ஆனால், 100 இஸ்லாமிய குடும்பங்களுக்கு மத்தியில் 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? முடியாது...
உதாரணம், வங்கதேசம். இதற்கு முன் பாகிஸ்தான் ஒரு உதாரணமாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? அங்கு எங்காவது புகைச்சல் ஏற்பட்டாலோ அல்லது யாராவது தாக்கப்பட்டாலோ, நாம் தாக்கப்படுவதற்கு முன்பு மிகவும் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும்." என குறிப்பிடுகிறார்.
Yogi Adityanath: மதக் கலவரங்களே இல்லை...
மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பாஜக உத்தர பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எவ்வித மத கலவரமும் ஏற்படவில்லை என்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். மேலும் அவர் கூறுகையில்,"உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், அவர்களும் (இஸ்லாமியர்கள்) பாதுகாப்பாக இருப்பார்கள்.
2017ஆம் ஆண்டுக்கு முன்னால் உத்தர பிரதேசத்தில் கலவரம் ஏற்பட்டால், இந்துக்களின் கடைகள் தீப்பற்றி எரிந்தால், இஸ்லாமியர்களின் கடைகளும் பற்றி எரியும். இந்துக்களின் வீடுகள் எரிந்தால், இஸ்லாமியர்களின் வீடுகளும் எரியும். ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் கலவரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.
Yogi Adityanath: சனாதான தர்மமே பழமையான மதம்
தொடர்ந்து பேசிய அவர்,"நான் ஒரு சாதாரண குடிமகன், உத்தர பிரதேசத்தின் குடிமகன். நான் ஒரு யோகி, அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துபவன். அனைவரின் ஆதரவு மற்றும் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்" என்றார்.
"சனாதான தர்மமே இந்த உலகின் பழமையான மதம் மற்றும் கலாச்சாரம் ஆகும். அதன் பெயரிலேயே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். சனாதான தர்மத்தை பின்பற்றியவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களை தங்களின் நம்பிக்கையை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தியதில்லை. ஆனால், அதற்கு பதிலாக அவர்களுக்கு என்ன கிடைத்தது?. இந்து ஆட்சியாளர்கள் யாரும் மற்ற பகுதிகளுக்குச் சென்று தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியதாக உலக வரலாற்றில் ஒரு உதாரணம் கூட இல்லை, அப்படி நடந்ததே இல்லை" என்றார்.
Yogi Adityanath: ராகுல், காங்கிரஸ் மீது கடும் தாக்கு
மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ராகுல் குறித்து பேசிய யோகி,"ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை பாரத் ஜோடோ அபியன் (இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை) இல்லை, பாரத் டோடோ அபியன் (இந்தியாவை பிரிக்கும் யாத்திரை).
அவர் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு இந்தியாவை விமர்சிப்பவர். அவர் இயல்பு மற்றும் நோக்கத்தை நாட்டு மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். பாஜக போன்றவர்களுக்கு ராகுல் காந்தி போன்ற சில மாதிரிகள் தேவைப்படுகிறது, இதனால் பாஜகவுக்கு பாதை எப்போதும் தெளிவாக இருக்கும். ஏன் காங்கிரஸ் முத்தலாக்கை ஒழிக்கவில்லை, ஏன் காங்கிரஸ் கும்பமேளாவை பெருமையுடனும், தெய்வீக மனப்பான்மையுடனும் முன்னெடுத்துச் செல்லவில்லை. ஏன் நாட்டின் உட்கட்டமைப்பை உலகத்தரத்தில் உயர்த்த காங்கிரஸ் தவறியது?" என பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பினார்.
Yogi Adityanath: சம்பல் விவகாரம் குறித்து பேச்சு
இந்து மதத்தின் முக்கியமான தளங்கள் அனைத்தும் இந்தியாவின் பாரம்பரியத்தின் அடையாளங்களாகும் என குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத்,"அவை எதுவாக இருந்தாலும், நாம் அவற்றைக் கண்டுபிடிப்போம். உலகிற்குகே காண்பிப்போம். கடவுள் கண்களைக் கொடுத்துள்ளார், அதைவைத்து அவர்கள் பார்க்கட்டும். சம்பலில் என்ன நடந்தது என பார்த்தோம்? சம்பல் உண்மை சம்பவம் ஆகும்" என்றார்.
அதாவது, உத்தர பிரதேச்தில் உள்ள சம்பல் நகரில் பழமையான கோவிலையை இடித்து, அதன்மீதுதான் ஷாஹி ஜமா மஸ்ஜித் என்ற மசூதி கட்டுப்பட்டுள்ளதாக பல்வேறு மனுதாரர்கள் இணைந்து வழக்கு தொடுத்துள்ளனர்.
Yogi Adityanath: பல கோயில்கள் மீட்டெடுப்போம்
இதுகுறித்து மேலும் பேசிய அவர்,"இந்துக்களின் கோவில்களை அழித்து அங்கு வழிப்பாட்டுத் தலங்களை அமைத்தால் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என இஸ்லாத்தில் கூறப்படுகிறது. அப்படியிருக்க, ஏன் அப்படி கட்டுகிறார்கள். எனது அரசு நிறைய ஆதாரங்களை திரட்டி கோவில்களை தொடர்ந்து மீட்டெடுப்போம். விஞ்ஞானப்பூர்வமான ஆதரங்கள் இருக்கின்றன. அவை எங்கிருக்கின்றன என்பதை நாங்கள் காட்டுகிறோம், அவற்றை ஒவ்வொன்றாக மீட்டெடுப்போம்" என்றார்.
மதுரா மசூதி விவகாரம் குறித்து அவரிடம் கேட்ட கேள்விக்கு,"நாங்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம். இல்லையெனில், இப்போது என்ன நடந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்?" என பதிலளித்தார்.
மேலும் படிக்க | நீதிபதி வீட்டில் பலகோடி பணம் - வீடியோ வெளியிட்ட உச்சநீதிமன்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ