அத்தையின் தங்கச்சி மீது காதல்... குறுக்கே வந்த மாமா... போட்டுத்தள்ளிய மருமகன்

Crime News In Tamil: அத்தையின் தங்கச்சியை காதலித்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்த மாமாவை தலையில் செங்கலை வைத்து தாக்கி கொலை செய்த மருமகன்... இந்த பகீர் சம்பவம் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2025, 11:43 AM IST
  • மாமாவுக்கு மது கொடுத்து அந்த மருமகன் போதையாக்கி உள்ளனர்.
  • அதன்பின் தலையில் பலமாக தாக்கி உள்ளனர்.
  • இதில் அந்த நபர் உயிரிழந்தார்.
அத்தையின் தங்கச்சி மீது காதல்... குறுக்கே வந்த மாமா... போட்டுத்தள்ளிய மருமகன்

Crime News In Tamil: காதல் திருமணம், சாதி மறுப்பு திருமணம், மத மறுப்பு திருமணம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் சமூகத்தில் தற்போது பதற்றத்தையே உண்டாக்குகின்றன. இதுபோன்ற திருமணங்களால் சமூகத்தில் சண்டைச் சச்சரவும் அதிகமாக நடக்கிறது எனலாம்.

Add Zee News as a Preferred Source

ஆணவக் கொலைகள் தாண்டி வன்முறை மற்றும் மிரட்டல் சம்பவங்களால் பல ஜோடிகள் பாதிக்கப்பட்டுள்ளதை பார்த்திருப்பீர்கள். இது ஒருபுறம் இருக்க, திருமணத்தை மீறிய உறவுகளாலும் பல பிரச்னைகள் வருவதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில், தற்போது உத்தர பிரதேசத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.   

Crime News: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில்தான் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் தனது அத்தையின் தங்கையை காதலித்து வந்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு அவரின் மாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ஆனால் மாமாவுக்கே ஷாக் கொடுக்கும் விதமாக, அந்த மருமகன் செங்கலால் தலையில் பலமாக தாக்கி உள்ளார். பலமான தாக்குதலில் அவரின் மாமா உயிரிழந்துள்ளார்.

ஆகாஷ் பிரஜாபதி என்ற இளைஞர்தான் இந்த சம்பவத்தை செய்துள்ளார். அவர் தனது மாமாவான மகேந்திரா பிரஜாபதியை பலமாக தாக்கி உள்ளார். அருகில் உள்ள கௌசாம்பி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை மகேந்திராவின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

Crime News: குற்றத்தின் பின்னணி என்ன?

இதுகுறித்து வெளியான முதற்கட்ட விசாரணையின்படி, 28 வயதான மகேந்திரா அவரது மருமகன் ஆகாஷ் உடன் கடந்த வியாழக்கிழமை மாலை பிரக்யாராஜ் நகரில் இருந்து புறப்பட்டுள்ளனர். ஆனால் இரவு முழுவதும் அவர் வீடு திரும்பிவில்லையாம். 

குடும்பத்தினர் இரவில் மகேந்திராவிடம் மொபைலில் பேசி உள்ளனர். அதன்பின் சில மணிநேரத்திலேயே அவரது மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. இதையடுத்து, மகேந்திரா வீடு திரும்பாததை அடுத்து போலீசாரிடம் குடும்பத்தார் புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மகேந்திராவின் மொபைலை ஆகாஷ் வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

Crime News: 3 பேர் கைது

ஆகாஷிடம் மேற்கொண்ட விசாரணையில் போலீசாரிடம் அவர் உண்மையை ஒப்புகொண்டுள்ளார். அதாவது, அத்தையின் தங்கையை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால் இந்த காதல் விவாகரத்தை கைவிடாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மாமா மகேந்திரா மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.  

இதையடுத்து, பயத்திலும், கோபத்திலும் தனது உறவினர் ரோஹித் மற்றும் நண்பர் விஜய் உடன் கூட்டு சேர்ந்து, மகேந்திராவை நன்கு மது அருந்தவைத்து அதன்பின் அவரது தலையை செங்கலால் பலமாக தாக்கி உள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த கறைப்படிந்த சட்டை, உயிரிழந்த மகேந்திராவின் மொபைலை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க |  Viral Video: சூட்கேஸ் உள்ளே இளம்பெண்... ஹாஸ்டலுக்கு கொண்டசெல்ல முயன்ற மாணவன்!

மேலும் படிக்க |  பைக்கில் நெருக்கமாக இருந்த காதல் ஜோடி... துன்புறுத்திய 5 பேர் கும்பல்... ஷாக் சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News