Bizarre News: நம் அனைவரும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ தாமதமாக சென்று ஆசிரியர்களிடம், மேலதிகாரியிடம் பொய் சொல்லி தப்பிக்கும் பழக்கத்தை வைத்திருப்போம். சிறுவயதில் இருந்தே சரியான நேரத்திற்கு செல்லாமல் எப்போதும் எதற்கும் தாமதமாகவே போகிறவர்கள் இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
Bizarre News: வைரலாகும் கடிதம்
அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் ஆயுதப்படை காவலராக உள்ள ஒருவர், மேலதிகாரியிடம் அளித்த கடிதத்தில் பணிக்கு தாமதமாக வருவதற்கு அவர் குறிப்பிட்டிருந்த காரணம்தான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த கடிதமும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Bizarre News: காவலர் மீது குற்றச்சாட்டு
அந்த கடிதம் 44வது பட்டாலியன் பிரதேச ஆயுதப்படை (PAC) தளபதிக்கு எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, பணியில் அலட்சியமாக செயல்படுவதாக கூறி அதற்கு விளக்கம் அளிக்கக் கோரி ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த பிப். 17ஆம் தேதியிட்ட நோட்டீஸில் மது சுதன் சர்மா என்ற காவலரின் மீதுதான் தவறான நடத்தை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | பெண்கள் மாதம் ரூ.2,500 பெறலாம்... தகுதிகள் என்ன? விண்ணபிப்பது எப்படி?
குறிப்பாக, முந்தைய நாள் (பிப். 16) காலை 9 மணிக்கு வராமல், என்ன காரணத்தால் தாமதமாக பணிக்கு வந்தீர்கள் என மது சுதன் சர்மாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், அந்த காவலர் முறையாக சவரம் செய்யவில்லை என்றும் சீருடையும் முறையாக அணியவில்லை என்றும் அதில் புகார் கூறப்பட்டிருந்தது. மேலும், அவர் தொடர்ந்து தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும் பணியிலும் போதிய ஆர்வமின்றி செயல்படுகிறார் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Bizarre News: விளக்கம் கேட்ட மேலதிகாரி
ஆயுதப்படையில் இதுபோன்ற தவறான நடத்தை, ஒழுங்கீனச் செயல்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதால் இவை அனைத்திற்கும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் கோரி அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தது. தவறினால், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர்.
Bizarre News: காவலர் அளித்த வினோத விளக்கம்
இந்நிலையில், மேலதிகாரிக்கு மது சுதன் சர்மா எழுதிய கடிதத்தின்தான் வினோதமாகவும், உருக்கமாகவும் ஒரு காரணத்தை அவர் கூறியிருந்தார். அவர் தாமதமாக வந்தது குறித்து அவர் கூறுகையில்,"பிப்.16ஆம் தேதி பணிக்கு தாமதமாக வந்ததற்கு காரணம், சில தனிப்பட்ட காரணத்தால் இரவில் என்னால் தூங்க முடியவில்லை.
எனக்கும் என் மனைவிக்கும் கடுமையான சண்டை நிலவுகிறது. அது எனது தூக்கத்தையும் பாதிக்கிறது. அவர் என் கனவில் வந்து என் நெஞ்சு மேல் உட்கார்ந்து, என் ரத்தத்தை குடித்து, என்னை கொலை செய்ய முயல்கிறார்" என குறிப்பிட்டுள்ளார். இந்த கனவினால் தனக்கு தூக்கமே வரவில்லை என்றும் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் அதில் கூறியிருந்தார்.
Bizarre News: மன உளச்சலை பகிர்ந்த காவலர்
மனச்சோர்வு மற்றும் எரிச்சல்தன்மைக்காக அவர் மருந்து சாப்பிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது தாயார் நரம்பியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதால் தான் மனவேதனையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த கடிதத்தில் அவர் நம்பிக்கையற்று இருப்பதாகவும், வாழ்வதற்கே விருப்பமில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் தான் அனுபவிக்கும் இந்த வலிகளில் இருந்து தப்பித்து எப்படி இறைவனிடம் தன்னை சரணடையச்செய்வது என்று வழிகாட்டுங்கள் என்றும் மேலதிகாரியிடமே கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் இந்த கடிதம் உண்மையா, இல்லையா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை, இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | முதலிரவு முடிந்த அடுத்த நாளே... குழந்தையை பெற்ற மணப்பெண் - ஷாக்கில் மாப்பிள்ளை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









