ஆண்கள் பற்றியும் யோசிங்க... மனைவியின் டார்ச்சரால் கணவன் தற்கொலை - ஷாக்கிங் வீடியோ

UP TCS Employee Suicide: ஆண்களைப் பற்றியும் சிந்தியுங்கள் என தனது கடைசி நொடியில் கண்கலங்கி டிசிஎஸ் ஊழியர் பேசிய வீடியோ நாட்டையே அதிர செய்துள்ளது. மனவ் சர்மாவுக்கு நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 28, 2025, 06:14 PM IST
  • இவர் தற்கொலைக்கு முன் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
  • இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
  • அவரது மனைவி மீது தற்போது வழக்குப்திவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் பற்றியும் யோசிங்க... மனைவியின் டார்ச்சரால் கணவன் தற்கொலை - ஷாக்கிங் வீடியோ

Uttar Pradesh TCS Employee Suicide: உத்தரபிரதேசத்தில் திருமணம் ஆன ஒரே ஆண்டில் மனைவியால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்துக் கொண்டுள்ளார். பிரபல மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மனவ் சர்மா தான் அந்த இளைஞர் ஆவார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

Crime News: மனவுக்கு நடந்தது என்ன?

அதில், இந்த சமூகம் ஆண்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் சந்திக்கும் கொடுமைகளையும் பேச வேண்டும் என்றும் கண்ணீர் மல்க பேசியுள்ளார். அதோடு இந்த முடிவை எடுத்ததற்காக பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

தனது மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், ஆனால் என்ன செய்ய முடியும் என்றும் இது யாருக்கும் பெரிய விஷயமாக தெரியவில்லை என்றும் மனவ் சர்மா வேதனையுடன் பேசியுள்ளார். ஆண்கள் தனியாக உள்ளோம், தயவு செய்து யாராவது இதைப்பற்றி பேசுங்கள் என்றும் மனவ் கதறி அழுதுள்ளார்.

Crime News: வீடியோவை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு

இந்த வீடியோவை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனவ் சர்மா மனைவி நிகிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நிகிதாவும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், பல முறை மனவ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், தன்னை குடித்துவிட்டு அடிப்பதை மனவ் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது வேறொருவருடன் தொடர்பு என்பது உண்மை இல்லை என்றும், திருமணத்துக்கு முன் ஒரு பிரேக் அப் ஆனதாகவும் சொல்லியுள்ளார்.

Crime News: பெங்களூரு சம்பவம்

தற்போது நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி மனவ் சர்மா தற்கொலை செய்துகொண்டாலும், இப்போது தான் நிகிதா மீது அவரின் சகோதரி புகார் அளித்துள்ளார். சமீப நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெங்களூருவில் சில வாரங்களுக்கு முன்பு அதுல் சுபாசஷ என்பவர் தனது மனைவி டார்ச்சர் செய்வதாக கூறி தற்கொலை செய்து கொண்டது நாட்டையே உலுக்கிய நிலையில், அடுத்தடு மனவ் சர்மா சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்)

மேலும் படிக்க | ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!

மேலும் படிக்க | உத்தரகாண்டில் பனிச்சரிவு: புதைந்த 47 பணியாளர்கள்... தொடரும் மீட்புப் பணிகள்!

மேலும் படிக்க | 30% உயர்ந்த தனியார் பள்ளி கட்டணம்! ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் கைவிரிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News