)
நாட்டில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, பணத்திற்காக பெற்ற மகன், மகள்களை கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற கொலை சம்பவங்களை தடுக்க மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கான்பூர்-எட்டாவா நெடுஞ்சாலையில் இளைஞரின் உடல் சடலமாக கண்டுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சடலம் பிரதீப் சர்மா என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த விசாரணையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கத்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மம்தா சிங். இவருடைய மகன் தான் பிரதீப் சர்மா (25).
மம்தாவின் கணவர் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்தவர் மயங்க். இவருடன் மம்தா பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவருக்கு காதலித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த, பிரதீப் சர்மா, மம்தா மற்றும மயங்க உறவை கடுமையாக எதிர்த்தார். பலமுறை தாய் மம்தாவிடம் இந்த உறவை துண்டிக்க வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால், அதனை மம்தா கேட்கவில்லை. இதனால், பிரதீப் சர்மா வீட்டிற்கு வராமல் தனியாக வாழத் தொடங்கினார். இவருக்கு ஆந்திராவில் ஒரு வேலையும் கிடைத்துள்ளது. இதனால் கோபமடைந்த பிரதீப்பின் தாயார் மம்தா, அவரது காதலன் மயங்க், அவரது சகோதரர் ரிஷி ஆகியோர் அவரைக் கொல்லத் திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்தனர். மயங்க் மற்றும் ரிஷி வேண்டுமென்றே பிரதீப்பின் பெயரில் பல காப்பீட்டு திட்டங்களை வாங்கினர்.
அந்த காப்பீட்டு திட்டம் ரூ.1 கோடி வரை இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தீபாவளி விடுமுறைக்காக பிரதீப் தங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அக்டோபர் 26ஆம் தேதி இரவு உணவிற்கு வெளியே அழைத்துச் செல்வதாகக் மயங்க் மற்றும் அவரது சகோதரர் ரிஷி இருவரும் கூறியுள்ளனர். இதனை நம்பி, பிரதீப் சர்மாவும் அவர்களுடன் காரில் சென்றிருக்கிறார். பயணித்தினிபோதே, பிரதீப் சர்மாவை சத்தியலால் இருவரும் தாக்கியுள்ளனர்.
பலமுறை அடித்ததில், பிரதீப் சர்மா உயிரிழந்தார். இதை ஒரு சாலை விபத்து போலக் காட்டும் முயற்சியில், பிரதீப் சர்மாவின் உடலை டெராபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்ஹராமௌ கிராமத்திற்கு அருகிலுள்ள கான்பூர்-எட்டாவா நெடுஞ்சாலையில் இருவரும் பிரதீப் சர்மாவின் உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பிரதீப் சர்மாவின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, இந்த கொலை சம்பவம் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த விரிவான விசாரணையில் பிரதீப் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் மயங்க் மற்றும் அவரது சசோதரர் ரிஷியை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மம்தா பிரதீப் சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், காப்பீட்டுத் தொகை கிடைத்ததும் அதைப் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் மயங்க் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, போலீசார் மம்தாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ