உத்தரகாண்டில் பனிச்சரிவு: புதைந்த 47 பணியாளர்கள்... தொடரும் மீட்புப் பணிகள்!

Uttarakhand Avalanche: உத்தரகாண்டின் சமாலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சுமார் 47 பணியாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Feb 28, 2025, 02:55 PM IST
  • மொத்தம் 57 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.
  • இதில் 10 பேர் பாதுகாப்பாக வெளியேறினர்.
  • இன்று 20 செமீ., வரை உத்தரகாண்டில் அதி கனமழைக்கு வாய்ப்பு
உத்தரகாண்டில் பனிச்சரிவு: புதைந்த 47 பணியாளர்கள்... தொடரும் மீட்புப் பணிகள்!

Uttarakhand Avalanche: உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் இன்று ஏற்பட்ட பனிச்சரவில் 57 பேர் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அதில் இருந்து 10 பேர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

இதை தொடர்ந்து மீதம் உள்ள 47 பேரை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாவட்ட நிர்வாகம், இந்தோ திபேத்திய எல்லை காவலர்கள், எல்லை சாலைகள் அமைப்பு சார்ந்தவர்கள் என பல்வேறு குழுவினர் மீட்புப்பணியில் இறங்கி உள்ளனர். உத்தரகாண்டில் இன்று இரவு வரை அதி கனமழைக்கு (20 செ.மீ., வரை) வாய்ப்பிருப்பதாக கணித்திருந்தது.

உத்தரகாண்டின் பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பினர் முகாமுக்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சாலை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்களே பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.

தற்போது சம்பவ இடத்திற்கு 3-4 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக அவை சம்பவ இடத்தை அடைவதற்கும் சாதம் ஏற்பட்டுள்ளதாக எல்லை சாலைகள் அமைப்பின் செயல் பொறியாளர் சிஆர் மீனா என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். மொத்தம் 60-65 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பனிச்சரிவு சம்பவத்தை அடுத்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அவரது X தளத்தில்,"சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் எல்லை சாலை அமைப்பினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் போது பல தொழிலாளர்கள் பனிச்சரிவில் புதைந்து போனதாக வருத்தமளிக்கும் செய்தி கிடைத்தது.

ITBP, BRO மற்றும் பிற மீட்புக் குழுக்களால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக நான் பகவான் பத்ரி விஷாலைப் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பிளாஸ்டிக் பேப்பரில் கம கம இட்லி..! காத்திருக்கும் பேராபத்து..! உஷார் மக்களே!

மேலும் படிக்க | 30% உயர்ந்த தனியார் பள்ளி கட்டணம்! ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் கைவிரிப்பு!

மேலும் படிக்க | மீன் பீர் குடிக்கும் வீடியோ! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News