)
Uttarakhand Cloud Burst Flash Floods Viral Video: உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகுதியில் பெரும் மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படப்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில், குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
BREAKING: Massive flooding in Khir Ganga in Dharali village of Uttarakhand following incessant heavy rain in the region, many feared trapped#Uttarakhand #UttarakhandRain pic.twitter.com/3j8lkxEOcH
— Vani Mehrotra (@vani_mehrotra) August 5, 2025
இதுவரை 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலை உச்சியில் இருந்து காட்டாற்று வெள்ளம் வேகமாக தரலி கிராமத்தை நோக்கி ஓடி வரும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. பல வீடுகள், ஹோட்டல்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்டுவதை பார்க்க முடிகிறது. அச்சத்தில் மக்கள் அலறுவதையும் வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
Another video of the disaster shows the floodwaters gushing down, destroying multiple houses and hotels in the region.
— Vani Mehrotra (@vani_mehrotra) August 5, 2025
Many are feared trapped; there may also be casualties. An official confirmation on the same is awaited. #Uttarakhand #UttarakhandRain #Uttarkashi #KhirGanga https://t.co/5OQqNJKMZJ pic.twitter.com/wQptVJek6J
குறைந்தபட்சம் 50 ஹோட்டல்கள் நீரில் மூழ்கி இருக்கலாம் அல்லது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வெள்ளத்தில் இருந்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் உயரமான மற்றும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நீர் மட்டத்தில் திடீர் அதிகரிப்பு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இன்னும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அவரது X பக்கத்தில், "தரலி (உத்தரகாஷி) பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்த செய்தி மிகவும் வருத்தத்தையும் துயரத்தையும் அளிக்கிறது. மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற குழுக்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக, நான் மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்பிற்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
धराली (उत्तरकाशी) क्षेत्र में बादल फटने से हुए भारी नुकसान का समाचार अत्यंत दुःखद एवं पीड़ादायक है। राहत एवं बचाव कार्यों के लिए SDRF, NDRF, जिला प्रशासन तथा अन्य संबंधित टीमें युद्ध स्तर पर जुटी हुई हैं।
— Pushkar Singh Dhami (@pushkardhami) August 5, 2025
इस सम्बन्ध में लगातार वरिष्ठ अधिकारियों से संपर्क में हूँ और स्थिति की गहन…
உத்தரகாண்டில் தற்போது மிகவும் அதிகனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாகவும் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால், ஹரித்வாரில் கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மலைச்சரிவில் இருந்து பாறைகள் சரிந்ததில் இரண்டு கடைகள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும் மழை தொடர்பான சம்பவங்களில் நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தற்போது ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த வாரம் மூலம் இங்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ