Varanasi Gang Harassment : மகளிருக்கு எதிரான வன்புணர்வுகளும், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், ஒரு சில பாலியல் வன்புனர்வு செய்திகளை கேட்கும் போது, மனமே பதைபதைக்கிறது. அப்படியொரு சம்பவம்தான், தற்போது வாரணாசியில் நடந்திருக்கிறது.
பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை!
உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு 19 வயது இளம்பெண்ணை 6 நாட்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அந்த பெண்ணுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி, மார்ச் 29ஆம் தேதி முதல், ஏப்ரல் 4ஆம் தேதி வரை, இளம்பெண்ணை 23 ஆண்கள் பல இடங்களில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த புகாரும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தரப்பில், ஏப்ரல் 6ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இது குறித்து உடனடி நடவடிக்க எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், போலீஸார் துரிதமாக செயல்பட்டனர். அதன் அடிப்படியில், பெண்ணிடம் தவறாக நடத்தல், குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் போன்றவற்றை கொடுத்து கட்டாயப்படுத்துதல், மிரட்டல் விடுத்தல், கூட்டுப்பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
12 பேர் கைது!
இந்த வழக்கில், போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அதில், இதுவரை 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருகின்றனர். இவர்களை அவர்கள் சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை வைத்து கண்டுபிடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆந்த பெண்ணின் கூற்றின் படி, முதல் குற்றவாளியான ராஜ் விஷ்வகர்மா அவரை ஒரு கஃபேவிற்கு அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதையடுத்து, சமீர் என்பவர் மறுநாள் பைக்கில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பலர் இந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இந்த வன்கொடுமைகளின் போது, இப்பெண்ணை அவர்கள் வீடியோ ரெக்கார்ட்டும் செய்ததாக கூறப்படுகிறது.
மார்ச் 29ல் ஆரம்பித்து, ஏப்ரல் 3ஆம் தேதி வரை, 23 பேரால் இந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். ஏப்ரல் 4ஆம் தேதி எப்படியோ வீட்டிற்கு வந்த இவர் பின்னர் குடும்பத்தாரிடம் இது குறித்து தெரிவித்ததை அடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். பிரதமர் மோடியின் உத்தரவும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இன்னும் போலீஸாருக்கு வேகத்தை கூட்டியது. இன்னும் 11 குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒருவருக்கு Hepatitis பாசிடிவ்!
பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு பாலியல் நோய் அதாவது Hepatitis-B பாசிடிவ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், பிற குற்றவாளிகளுக்கும் இந்த நோய் பரவியிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணிற்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அப்பெண் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | 12ஆம் வகுப்பு மாணவனை கரம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்! வினோத செய்தி..
மேலும் படிக்க | அத்தையின் தங்கச்சி மீது காதல்... குறுக்கே வந்த மாமா... போட்டுத்தள்ளிய மருமகன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









