ரூ.1000 கடன் வாங்கி..ரூ.11 கோடி லாட்டரி வென்ற நபர்! வைரல் செய்தி..

Vegetable Vendor Wins 11 Crore Lottery : ஆயிரம் ரூபாய் கடன் தந்த நண்பருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்கிய காய்கறி விற்பனையாளர்.

Written by - Yuvashree | Last Updated : Nov 6, 2025, 07:53 PM IST
  • ஆயிரம் ரூபாய் கடன் தந்த நண்பர்..
  • 11 கோடி வென்ற நபர்..
  • நண்பருக்கு கோடி கணக்கில் ரிட்டர்ன்..
ரூ.1000 கடன் வாங்கி..ரூ.11 கோடி லாட்டரி வென்ற நபர்! வைரல் செய்தி..

Vegetable Vendor Wins 11 Crore Lottery : ராஜஸ்தான் மாநிலம், கோட்புட்லி பகுதியை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி அமித் சேஹ்ரா. இவர் கடந்த வாரம் தனது நண்பரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் வேலை நிமித்தமாக அவர் பஞ்சாப் சென்றுள்ளார். அங்கு அப்பணத்தைக் கொண்டு Punjab State Lottery’s Diwali Bumper 2025 drawவில் 11 கோடி ரூபாய்க்கான லாட்டரி சீட்டு இரண்டை வாங்கியுள்ளார். 

Add Zee News as a Preferred Source

32 வயதான அமித் சேஹ்ராவின் இதுநாள் வரையிலான கஷ்டங்கள் அனைத்தும் ஒரே இரவில் மாறியது. குடும்பத்திற்கு தினசரி 3 வேளை உணவு அளிக்கவே கஷ்டப்பட்டு வந்த அமித் ஒரே இரவில் 11 கோடி ரூபாய்க்கு அதிபதியானார்.

ஒரே நாளில் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவர் வாங்கிய 500 ரூபாய் மதிப்பிலான இரண்டு லாட்டரி சீட்டுகளில் ஒன்றில் 11 கோடி விழுந்தது. ஆனால் அவரது மற்றொரு லாட்டரி சீட்டுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கொஞ்சநெஞ்ச அதிர்ஷ்டமும் பிசுருதட்டாமல் அமித்க்கு பணத்தை அள்ளி வழங்கியுள்ளது.

அதையடுத்து, பணத்தை பெற்றுக்கொள்வதற்காக அமித் தனது ஆதாரங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்கள் அவரை பேட்டி எடுத்தனர். அப்போது அவர், என் வாழ்நாள் கஷ்டங்கள் எல்லாம் பறந்து போயிற்று... இனி என் குடும்பம் கஷ்டப்படாது. எனக்கு வேண்டியபோது 1000 ரூபாய் கடன் தந்து உதவிய நண்பரின் மகள்கள் இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் தரவுள்ளேன் என தெரிவித்தார்.

தான் 11 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியும் தனக்கு உதவிய நண்பரை கைவிடாமல் அவருக்கும் பகிர்ந்தளித்த அமித்தின் நல்ல உள்ளத்தை ராஜஸ்தான் மக்கள் பாராட்டி வருகின்றனர். இவரது நன்றி உணர்வுக்கு சமூக வளைதல வாசிகள் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பீகார் தேர்தல் 2025: துணை முதல்வர் மீது செருப்பு , கற்கள் வீச்சு.. காரை சுற்றி வளைத்த மக்கள்!

மேலும் படிக்க | “எப்போ திருமணம் செய்து கொள்வீர்கள்?” ராகுல் காந்தியிடம் சிறுவன் கேட்ட கேள்வி-அவர் கூறிய பதில்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News