எமனாய் மாறிய 'லக்கி' நம்பர்; முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் நிறைவேறாத ஆசை!

Ahmedabad Plane Crash: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவரின் லக்கி நம்பரே துயரமாக முடிந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 13, 2025, 12:37 PM IST
  • விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர்.
  • ஒரே ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.
  • முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் அதில் இருந்தார்.
எமனாய் மாறிய 'லக்கி' நம்பர்; முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் நிறைவேறாத ஆசை!

Ahmedabad Air India Plane Crash: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று (ஜூன் 12) மதியம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 5 நிமிடங்களில் வானில் பறக்க முடியாமல் திணறி, மருத்துவக் கல்லூரியின் ஹாஸ்டல் கட்டடத்தில் வீழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது.

Add Zee News as a Preferred Source

Ahmedabad Plane Crash: 241 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள், விமானிகள், பணியாளர்கள் என 241 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரமேஷ் விஸ்வாஸ்குமார் என்பவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். பொதுமக்கள் சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. 

Ahmedabad Plane Crash: விஜய் ரூபானியும் உயிரிழந்தார்

இந்த விமானத்தில் ஏறிய பயணிகளின், பணியாளர்களின் கனவுகள், ஆசைகள் எல்லாம் அகமதாபாத்தில் மொத்தமாக தீக்கரையாகின. உயிரிழந்த பலரின் கதைகளை கேட்டாலே மனது கனக்கிறது. அப்படியிருக்க, நேற்றைய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர். அவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

அவர் அந்த விமானத்தில் 2D இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது மறைவை மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உறுதிப்படுத்தினார். பாஜகவைச் சேர்ந்த விஜய் ரூபானி 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை குஜராத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார். இவரது பொது வாழ்வும், தனிப்பட்ட வாழ்வும் பெருமளவு அனைவரின் பார்வையிலேயே இருந்தது. அந்த வகையில், விஜய் ரூபானிக்கு '1206' என்பது ராசியான நம்பராக இருந்ததாக கூறப்படுகிறது.

Ahmedabad Plane Crash: எமனாய் மாறிய லக்கி நம்பர்

அதாவது, '1206' என்பதுதான் அவருடைய வாகனங்களின் பதிவு எண்ணாக இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் அவர் வைத்துள்ள ஸ்கூட்டரின் பதிவு எண்ணில் இருந்து முதலமைச்சராக பதவி வகித்த போது அவர் வைத்திருந்த அரசு கார் வரை அனைத்திற்கும் '1206' என்பதே பதிவு எண்ணாக இருந்துள்ளது. அவர் அதை லக்கி நம்பராக பார்த்து வந்துள்ளார். குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள அவரது குடியிருப்பில் நின்றுொண்டிருந்த வாகனங்களில் இப்போதும் 1206 என்பதே பதிவு எண்ணாக இருக்கிறது. அதன் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன. 

ஆனால், அந்த எண்ணுக்கும் அவருக்குமான தொடர்பு கடைசியில் துயரத்தில் முடிந்துவிட்டது. அவர் உயிரிழந்த தேதியும் ஜூன் 12 (12.06) ஆகும். அவரின் விதி மிகவும் கொடூரமாக இருந்துள்ளதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அவர் லண்டனில் உள்ள மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காகவே விமானத்தில் பயணித்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.

இதுகுறித்து குஜராத் பாஜக மாநில தலைவர் சிஆர் பாட்டீல் அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,"எங்கள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான விஜய் ரூபானி தனது குடும்பத்தினரைச் சந்திக்க லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த சம்பவத்தில் அவரும் உயிரிழந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இது பாஜகவுக்கு ஒரு பெரிய இழப்பு" என குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | அகமதாபாத் விமானத்தை தவறவிட்டதால் உயிர் பிழைத்த பெண்.... 10 நிமிட தாமதத்தால் கிடைத்த மறுபிறவி

மேலும் படிக்க | அகமதாபாத் விமான விபத்து : பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட முக்கிய செய்தி

மேலும் படிக்க | அகமதாபாத் விமான விபத்து : ’ காற்றில் கலந்த கனவுகள்’ மனதை உலுக்கும் விமான பயணிகளின் கதை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News