)
Gujarat Jewellery Owner Slapped Woman Viral Video: திருட்டு என வந்துவிட்டால் நூதன முறையில் திருடுவது நெடுங்காலமாக நடப்பது. மக்கள் எவ்வளவு உஷாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து பணம் பிக்பாட் அடிப்பது, செயின் பறிப்பது, பூட்டிய வீட்டில் திருடுவது என விதவிதமாக திருடுபவர்களை பார்த்திருப்பீர்கள்.
அந்த வகையில், தற்போது நகைக் கடையில் நூதன முறையில் திருட வந்த பெண்ணுக்கு தர்ம அடி கிடைத்திருக்கிறது, இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் நுழைந்த பெண், கடைக்காரரின் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை திருட முயற்சித்துள்ளார். ஆனால் உஷாரான கடைக்காரர் அந்த பெண்ணை கையோடு பிடித்தார். பிடித்தது மட்டுமின்றி 25 நொடிகளில் சுமார் 17 முறை அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் முழுமையாக பதிவாகி உள்ளது. அகமதாபாத்தின் ராணிப் காய்கறி சந்தை பகுதியில் உள்ள அந்த நகைக்கடைக்குள் துப்பட்டாவை வைத்து முகத்தை மூடிக்கொண்டபடி ஒரு பெண் கடைக்குள் நுழைகிறார். சில நொடிகளில் அந்த பெண் தனது கையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து கடைக்காரரின் முகத்தில் வீச முயற்சிக்கிறார்.
ஆனால், அந்த மிளகாய் பொடி அவர் முகத்தில் பெரிதாகப்படவில்லை. உடனே உஷாராகி, அந்த பெண் திருட வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட கடைக்காரர், அந்த பெண்ணை பிடித்து பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார். அதாவது 25 நொடிகளில் 17 முறை கன்னத்தில் அறையும் அளவிற்கு கோபமாக இருந்துள்ளார். கவுண்டரில் இருந்து வெளியே வந்து, அந்த பெண்ணை கடைக்குள் வெளியே தள்ளிய அவர் தொடர்ந்து அந்த பெண்ணை தாக்கினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Ahmedabad: Jeweller thrashes woman who throws chilly powder at him, footage goes viral. pic.twitter.com/0DfRGtTVru
(@KushalSharma_89) November 7, 2025
இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் விசாரித்ததில், நகைக் கடைக்காரர் புகார் ஏதும் கொடுக்கவில்லை என்றும் ஆனால் கிடைத்திருக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து அந்த பெண் யார் என கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு முறை நகைக் கடைக்காரரை புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியும் அவர் மறுத்துவிட்டதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ