கரண்ட் கம்பியில் புல்-அப் செய்த இளைஞர்! வைரலாகும் வீடியோ..

Viral Video Man Doing Pull Ups In Electricity Pole : ஒரு இளைஞர் கரண்ட் கம்பியில் தொங்கி உடற்பயிற்சி செய்யும் வீடியா இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 2, 2025, 02:53 PM IST
  • கரண்ட் கம்பியில் புல் அப்
  • ஆபத்தான விளையாட்டில் இளைஞர்..
  • வைரலாகும் வீடியோ..
கரண்ட் கம்பியில் புல்-அப் செய்த இளைஞர்! வைரலாகும் வீடியோ..

Viral Video Man Doing Pull Ups In Electricity Pole : இணையத்தில் வைரமாகும் வீடியோக்களுக்கு தற்போது அளவை இல்லாமல் இருக்கிறது. சில இளைஞர்கள் எதார்த்தமாக இருக்கும் விஷயங்களை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். அவை எதிர்பாரா விதமாக வைரலாகி விடுகின்றன. ஒரு சில பேர் தான் வேண்டுமென்றே பிரபலமாக வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் செய்தும் இணையத்தில் பதிவிடுகின்றனர். ஒரு சிலர், தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் கூட சில ஸ்டாண்ட்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

வைரல் வீடியோ:

கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, இணையவாசிகளை கோவத்திற்கு ஆளாக்கி உள்ளது. இந்த வீடியோவை ஒரு பிட்னஸ் பேஜ்  பதிவிட்டுள்ளது.

அதிகபட்ச மின்சாரம் பாயும் அந்த மின்சார கம்பத்தில் செல்லும் இரு கம்பிகளை பிடித்துக்கொண்டு ஒரு இளைஞர் புல் அப் செய்கிறார். கால்களை கம்பிகளுக்கு இடையே பிடித்து வைத்திருக்கிறார். இந்த வீடியோவை பதிவிட்டு இருப்பவர்கள், “எந்த இடம் என்று முக்கியமில்லை, ட்ரெயினிங் செய்கிறோம் என்பதுதான்” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டு இருக்கின்றனர்.

பல ஆயிரம் வியூஸ்களை கடந்து:

இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ, தற்போது 2.3 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. பல ஆயிரம் பேர் இதற்கு லைக்ஸ்களையும் போட்டு குவித்து இருக்கின்றனர். இந்த நபர், இப்படி மூளை இல்லாமல் நடந்து கொண்டதை பலர் கண்டித்து வருகின்றனர். இன்னும் சிலர், அந்த நபரின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருவர், “இந்த நபர், இறப்புடன் ட்ரெயினிங் செய்து வருகிறார்” என்று கூறியிருக்கிறார். இன்னொருவர், “என்னமோ 4-5 பிறப்பு இருப்பது போல இந்த நபர் நடந்து கொள்கிறார்” என்று கூறியிருக்கிறார். இன்னும் சிலர், தசை ஏறுவதற்கு முன்பு நீங்கள் சொர்கத்திற்கு படி ஏறி விடுவீர்கள் போல...” என்று கூறி இருக்கின்றனர்.

ஒரு சில நெட்டிசன்கள், சமூக வலைதளங்கள் இன்றைய இளைஞர்களை கெடுப்பதாகவும், இதை ஒரு வயது வராத குழந்தை பார்த்தால் இதனால் கெட்டுப்போவாதா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, அந்த இளைஞர் யார் என்று கண்டுபிடிக்கும் வேலையில் காவலர்கள் இறங்கினார்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | பைக் டேங்கில் அமர்ந்து-கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News