Viral Video Of Man Marrying Two Women : தெலுங்கானா மாநிலம் லிங்கபூர் மாவட்டத்தில் உள்ள கும்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்ய தேவ். இவர் தெலுங்கான திரைப்படத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சிர்பூர் கிராமத்தை சேர்ந்த கனக லால் தேவி என்பவருடன் சூர்ய தேவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கத்தை அதிகரிக்க இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சூர்ய தேவ் கனக லால் தேவியிடம் இருந்து விலகி சென்றுள்ளார்.
இதற்கிடையே, புல்லாரா கிராமத்தை சேர்ந்த ஜல்கர் தேவி என்ற பெண்ணுடன் சூர்ய தேவுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சூர்ய தேவ், ஜல்கர் தேவியை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் முன்னாள் காதலி கனகலால் தேவிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் கடும் கோவமடைந்த அவர், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சூர்ய தேவை வலியுறுத்தியுள்ளார். மேலும், நடந்த விஷயத்தைக் கிராம முக்கியஸ்தர்களிடம் கூறி முறையிட்டு இருக்கிறார்.
तेलंगाना: अजब प्रेम की गजब कहानी! एक युवक को दो लड़कियों से हुआ प्यार, फिर एक ही मंडप में दोनों से रचाई शादी। शादी का वीडियो सामने आया, जिसमें परिवार की मौजूदगी में पूरी रस्में निभाई गईं।#Telangana #UniqueWedding #LoveStory #Groom #Bride #ViralVideo #Marriage #LoveTriangle… pic.twitter.com/F1BxLh48a8
— FirstBiharJharkhand (@firstbiharnews) March 29, 2025
இதுகுறித்து கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், சூர்ய தேவ் முன்னாள் காதலி கனக லால் தேவியை திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்டார். அதே சமயம் தற்போதைய காதலியான ஜல்கர் தேவியை தனக்கு பிடித்து இருப்பதாக கூறிய சூர்ய தேவ், அவரையும் திருமணம் செய்துகொள்வதாக கூறி உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இரு பெண்களையும் எந்த வித வேறுபாடு இன்றி சமமாக நடத்துவேன் என்றும், இருவரையும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழவைப்பேன் என்றும் சூர்ய தேவ் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, கனக லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மூன்று வீட்டாரின் சம்மதத்துடன், கிராம முக்கியஸ்தர்களின் முன்னிலையில் பழங்குடியின பழக்க வழக்கத்தின் படி கடந்த 27 ஆம் தேதி இரு பெண்களையும் ஒரே மண்டபத்தில் வைத்து சூர்ய தேவ் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ஒரு தரப்பினர் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இது உண்மையில் நடந்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்று கமெண்ட் செய்துள்ளனர்... சிலரோ இப்படி செய்வது தவறு என்று கமெண்ட் செய்துள்ளனர்
மேலும் படிக்க | பயங்கர பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய குழந்தைகள்! வைரலாகும் வீடியோ..
மேலும் படிக்க | பைக் டேங்கில் அமர்ந்து-கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









