Viral Video Of Watchman Who Got Beaten Up By Dog Lover : இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், பல சமயங்களில் நம்ப முடியாதவையாக இருக்கின்றன. இவற்றில் ஒரு சில, “மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா?” என்று நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. மிருகங்களுக்கு எதிராக மனிதர்கள், பல்வேறு வன்கொடுமைகள் செய்வதை பார்த்திருப்போம். மனிதர்களை மிருகங்கள் கடித்து குதறுவதை பார்த்திருப்போம். ஆனால் நாய்கள் தன்னை கடிக்க வந்ததை ஒருவர் தடுக்கும் போது, அப்படி தற்காத்து கொள்பவரை அடித்து யாரேனும் பார்த்துள்ளீர்களா? அது குறித்த சிசிடிவி காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிசிடிவி காட்சிகள்:
இந்த வீடியோ மும்பையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வரும் இந்த வீடியோவில் சில அதிர்ச்சியுறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
#Mumbai, Maharashtra: A security guard was attacked by a dog lover for using a stick in self defence after being attacked by a pack of dogs in a residential building complex in Mumbai.
True animal life is more precious than human in #NewIndia pic.twitter.com/sOpMHzqhw8
— Saba Khan (@ItsKhan_Saba) March 7, 2025
இதில், கட்டட பாதுகாவர் (Watchman)ஒருவர், கையில் கொம்புடன் நடந்து வருகிறார். அப்போது, எங்கோ சுற்றிக்கொண்டிருத சில நாய்கள் இவரை சுற்றி வளைக்கின்றன. அந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு 10 நாய்கள் இருக்கின்றன. இவை, அவரை கடிப்பது போல பாய்கின்றன. இவற்றிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்வதற்காக அந்த நபர் கம்பை எடுத்து காட்டுகிறார். ஆனால், எந்த நாய் மீதும் அந்த கம்பு படவில்லை. தன்னை தற்காத்துக்கொள்ள, அந்த நபர் கம்பெடுத்து காட்டியதை பார்த்த ஒருவர், அவரை வந்து தாக்குவதும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.
அனிமல் லவ்வர்-னு நெனப்பா?
தன்னை பாதுகாப்பதற்காக ஒருவர் கம்பெடுத்தால், அவை இப்படி அடிப்பதா? என்று அடித்த அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்து பலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதை பார்த்த ஒரு சிலர், இவருக்கு யாரேனும் ‘ஹீரோ டு அனிமல்ஸ்’ அவார்டை தூக்கு குடுங்கப்பா என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். மிருகங்களை பிடித்த நபராக இருக்கலாம், அதற்கென மனிதர்களை வெறுக்கும் நபராக இருக்கலாமா? என்றும் சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.
உண்மை என்னவென்று தெரியாதே…
மிருகங்கள் அனைத்துமே ஐந்தரிவு கொண்டவைதான். இவை, எந்த காரணமும் இல்லாமல் ஒருவரை தாக்காது என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், பல சமயங்களில் 2 வயது குழந்தையை வீட்டிற்குள் வந்து கடிப்பதையும், தெருவில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை கடித்து குதறுவதையும் கூட பார்த்திருக்கிறோம். இப்பாேது இந்த வீடியோவை வைத்து பார்க்கும் போது, அந்த நபர் தன்னை பாதுகாக்க கம்பெடுத்ததை, தாக்குவதற்காக எடுத்துக்கொண்டதாக நினைத்து அந்த நாய்கள் தாக்க முற்பட்டிருக்கலாம். ஏனென்றால், வாட்ச்மேனை வந்து தாக்கிய நபரை அந்த நாய்கள் ஒன்றுமே செய்யவில்லை. எனவே, இதில் உண்மை என்னவென்று தெரியாமல் யாரும் எதுவும் பேசக்கூடாது எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | காணாமல் போன சிறுமி-காத்திருந்த பேரதிர்ச்சி..! தந்தை கைது..!
மேலும் படிக்க | மருத்துவமனை Bill-ஐ பார்த்தவுடன் கோமாவில் இருந்து எழுந்த இளைஞர்! வைரலாகும் வீடியாே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









