பஹல்காம் தாக்குதல்: உயிர் பிழைத்தவரின் செல்போனில் பதிவான வீடியோ! நடுங்க வைக்கும் காட்சிகள்..

Viral Video Tourist In Zipline Captures Pahalgam Terror Attack : பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 29, 2025, 07:30 PM IST
  • ஜிப் லைனில் சென்ற சுற்றுலா பயணி
  • திடீரென கேட்ட துப்பாக்கிச்சூடு
  • நடுங்க வைக்கும் காட்சிகள்
பஹல்காம் தாக்குதல்: உயிர் பிழைத்தவரின் செல்போனில் பதிவான வீடியோ! நடுங்க வைக்கும் காட்சிகள்..

Viral Video Tourist In Zipline Captures Pahalgam Terror Attack : நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது பஹல்காம் தாக்குதல். ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த இந்த அசம்பாவிதம் குறித்து இந்தியர்கள் பரபரப்பாக பேசி வரும் நிலையில் இன்னொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

பஹல்காம் தாக்குதல்:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பஹல்காம் பள்ளத்தாக்கில் இந்த தாக்குதல் நடந்தது. சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இந்த இடத்தில், மர்ம நபர்கள் வந்து வெளியூர் மற்றும் உள்ளூர்வாசிகளை துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் 26 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் புதிதாக திருமணமான இந்தியகடற்படை வீரர், உளவுத்துறை அதிகாரி, திருமணத்திற்கு சென்றவர்கள், நண்பர்களுடன் சுற்றுலா சென்றவர்கள் என பலியாகி இருக்கின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், பாகிஸ்தானில் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்புதான் இதை நிகழ்த்திருப்பதாகவும் இந்தியா கூறி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது.

வைரலாகும் வீடியோக்கள்..

பஹல்காம் தாக்குதல் நடந்த பிறகு, ராணுவ வீரர்கள், உள்ளூர்வாசிகள் சேர்ந்து சம்பவ இடத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வீடியோக்களும், அடிப்பட்டு சிலர் ஓடி வந்த வீடியோக்களும் வைரலானது. இப்போது புதிதாக ஒரு சுற்றுலா பயணியின் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி இருக்கிறது. 

ஜிப் லைனில் அந்த சுற்றுலா பயணி செல்லும் போது, கையில் செல்பி ஸ்டிக்கில் தனது மொபைலை பொருத்தி எடுத்து செல்கிறார். அவர் ஜிப்லைன் சென்று கொண்டிருக்கும்போது துப்பாக்கி சூடு சத்தம் கேட்பதும், உடனே அவர் அருகில் இருந்த ஜிப் லைன் ஊழலைன் “அல்லா ஹு அக்பர்” என்று கூறுவதும் பதிவாகி இருக்கிறது.

இந்த வீடியோவை எடுத்தவர் ஊடகத்தினரிடம் பேசியபோது, தான் ஜிப் லைனில் சென்று கொண்டிருக்கும்போது முதல் 20 வினாடிகளுக்கு என்ன நடக்கிறது என்று தனக்கு கேட்கவில்லை என்றும் அதன் பிறகு தான் துப்பாக்கி சூடு நிகழ்வதையும் சிலர் கீழே விழுவதையும் பார்த்ததாக கூறினார். அதன் பிறகு அந்த ஜிப் லைனில் இருந்த ஊழியர் அல்லாஹு அக்பர் என மூன்று முறை கூறியதாகவும் பேசினார். 

இதை பார்த்த பிறகு தான் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடி சென்று வேறு ஒரு இடத்தில் பதுங்கிக் கொண்டதாகவும் கூறினார். இந்த வீடியாே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Pahalgam News: காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடல்... அரசு அதிரடி - முழு பின்னணி

மேலும் படிக்க | பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைய தடை.. மத்திய அரசு அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News