)
Woman Struggles To Breathe Crowd Laughs Video : உலகில் நடந்து வரும் சில விஷயங்களை பார்த்தால், இங்கு மனிதாபிமானம் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படிப்பட்ட சம்பவம்தான், தற்போது பீகாரில் நடந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
மூச்சு விட சிரமப்பட்ட பெண்..
சமூக வலைதளங்களில், கடந்த சில நாட்களாகவே வைரலாகும் ஒரு வீடியோதான் இது. அந்த பெண், அதில் ட்ரெயினில் அமர்ந்திருக்கிறார். மூச்சு விட சிரமப்படும் அந்த பெண், ட்ரெயின் ஜன்னலை திறந்து வைத்து விட்டு மூச்சுத்திணறியவாறு அமர்ந்திருக்கிறார். வெளியில், ட்ரெயினில் ஏறுவதற்காக பெரும் கூட்டம் காத்துக்கொண்டுள்ளனர்.
A recent incident on a crowded train in Bihar shocked onlookers as a young girl struggled to breathe due to overcrowding, while passengers on the platform laughed and ignored her distress. This event highlights a growing concern about declining empathy and social responsibility… pic.twitter.com/hKojfgtVd8
— The Logical Indian (@LogicalIndians) August 11, 2025
அந்த பெண் அப்படி தினறுவதை பார்த்த அனைவரும், அந்த பெண்ணை கேலி செய்து சிரிக்கின்றனர். உள்ளே அந்த பெண்ணிற்கு மயக்கம் தெளிய வைக்கவும், முகத்தில் தண்ணீர் அடிக்கின்றனர். இதைப்பார்த்தும் அந்த பெண்ணை சிலர் கேலி செய்வதை தொடருகின்றனர். சிலர் அதனை வீடியோவும் எடுக்க ஆரம்பித்து விட்டனர்.
எங்கே சென்றது மனித நேயம்?
பெண் இப்படி மூச்சுத்திணறி சிரமப்படுவதை பார்த்த வெளியில் இருந்தவர்கள், அவரை இப்படி கேலி செய்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாக ஆரம்பித்தது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சிலர், “எங்கே சென்று காெண்டிருக்கிறோம் நாம்? எங்கே சென்றது மனிதநேயம்?” என்று கேட்டு வருகின்றனர்.
ஒரு சிலர், ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை டேக் செய்து, இப்படி பண்டிகை காலங்களில், கூட்டத்தை கட்டுப்படுத்த அதற்கு தகுந்த அதிகாரிகளை இங்கு பணியமர்த்த வேண்டும் என்றும் சிலர் கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசிபொருளாக மாறி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ