Women Sets Mother In Law On Fire : காலமும் உலகமும் எவ்வளவோ மாறிவிட்டாலும், இன்னும் நம்மில் சிலர் சிறிய வட்டத்திற்குள் சிக்கி தவிப்பது போன்ற உணர்வை, சில விஷயங்கள் கொடுக்கும். அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று, ‘மாமியார்-மருமகள் சண்டை’. இது இன்னும் தொடர்ந்து வருவதால்தான், பல சீரியல்களிலும் படங்களிலும் இன்னும் இது ஒரு கதையாக காண்பிக்கப்பட்டு வருகிறது. இப்போதும், அப்படியொரு சம்பவம்தான் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்திருக்கிறது.
மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்!
விசாகப்பட்டினத்தில், ஜெயந்தி லலிதா என்கிற 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண், பெண்டூர்தி என்கிற இடத்தில் வசித்து வருகிறார். இவர், தன் மாமியாரை எரித்து கொன்ற வழக்கில் சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து நடத்திய விசாரணையில், தான் தனது மாமியாரை கொன்றதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது குறித்து பேசிய போலீசார், கடந்த நவம்பர் 7ஆம் தேதியன்று காலை 8.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். ஜெயந்தி கனகா மகாலக்ஷ்மி என்கிற 63 வயது பெண், தீக்காயத்தால் இறந்திருப்பதாக தெரிவித்தனர். தன் தாய் இறந்ததற்கு காரணம், தன் மனைவிதான் என்று 36 வயதான கோயில் பூசாரி ஜெயந்தி சுப்பிரமணியன் போலீஸில் புகார் கொடுத்ததன் பேரில் தற்போது இறந்த பெண்ணின் மருமகள் கைது செய்யப்பட்டு, குற்றத்தையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
எப்படி நடந்தது?
லலிதா தேவி, குற்றத்தை ஒப்புக்கொண்ட போது, இதை செய்ததற்கான காரணம் குறித்தும் தன் வீட்டில் இருந்த பிரச்சனை குறித்தும் தெரிவித்திருக்கிறார். திருமணமாகி வந்த நாள் முதலாக, வீட்டை சுத்தம் செய்வது மற்றும் பிற வீட்டு வேலைகளை பார்ப்பதில் பிரச்சனை எழுந்திருக்கிறது.
கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று, கோசலா ஜங்ஸன் என்கிற இடத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கிலிருந்து லலிதா பெட்ரோல் வாங்கியிருக்கிறார். காருக்காக எனக்கூறி வாங்கிய இந்த பெட்ரோலை, அவர் அடுத்த நாள் காலையிலேயே பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
மறுநாள் காலையில் தனது கணவர் வீட்டை விட்டு கிளம்பிய பின்பு, தன் மாமியாரை ”திருடன் போலீஸ் விளையாடலாம் வாங்க..” என்று அழைத்து கண்ணை கட்டியுள்ளார். பின்னர், அவரை ஒரு சேரில் கட்டிப்போட்டு, மேலே பெட்ரோல் ஊற்றி தீயை போட்டு கொளுத்தியிருக்கிறார்.
காப்பாற்ற சென்ற பேத்தி!
தன் பாட்டி கண்முன்னே எரிவதை, அவரது 8 வயதான பேத்தி ஸ்ரீநாயனா பார்த்திருக்கிறார். பின்னர், தனது பாட்டியை காப்பாற்ற முயன்ற அந்த குழந்தைக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இப்போது அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை... சாலையில் தூங்கியவரை கடத்திச் சென்று கொடூரம்!
மேலும் படிக்க | மகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









