India Pakistan War | சண்டிகரில் சைரன் ஒலி எச்சரிக்கை.. மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்..

Chandigarh Siren alert பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் சண்டிகரில் சைரன் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : May 9, 2025, 11:22 AM IST
  • சண்டிகரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம்
  • அபாய சைரன் ஒலி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
  • பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தல்
India Pakistan War | சண்டிகரில் சைரன் ஒலி எச்சரிக்கை.. மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்..

India Pakistan war, Chandigarh High alert : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டம் அடைந்திருக்கும் நிலையில் சண்டிகரில் சைரன் ஒலி ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அந்த நகரை தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதை யூகித்திருக்கும் இந்தியா, முன்னெச்சரிக்கையாக அங்கு அபாய ஒலியை எழுப்பியுள்ளது. நேற்று இரவு முதல் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் அதை தொடர்ந்து குஜராத் உளிட்ட பல்வேறு பாகிஸ்தானை ஒட்டிய இந்திய மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக எல்லையையொட்டிய இந்திய பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது.

Add Zee News as a Preferred Source

அந்த அனைத்து ட்ரோன் தாக்குதலையும் இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர். இருந்தாலும் ஜம்மு காஷ்மீரின் உட்பட பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்திருக்கிறது. அதுத்தொடர்பான காட்சிகள் வெளியாக இருக்கிறது. நேற்று இரவு முழுவதுமே பதற்றமான சூழல் காணப்பட்டு வந்தநிலையில், காலையில் சற்று அமைதி திரும்பி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. எந்தவிதமான வெடி சத்தங்களும் ட்ரோன் தாக்குதல் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது திடீரென்று சண்டிகரில் சைரன் ஒளி ஒழிக்கப்பட்டு வருகிறது. அந்த சைரன் ஒளியை பொறுத்தவரையில் பாகிஸ்தானால் நடத்தப்படக்கூடிய வான் தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கையாக இந்த சைரன் ஒளியாக ஒலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சைரன் ஒலி ஒலிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் அனைவரும் பதுங்கு குழிக்குள் செல்ல வேண்டும். அதேபோன்று வெளியில் யாரும் நடமாடக்கூடாது. பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன் தாக்குதல் தொடங்கி இருக்கிறார்களா என்ற கேள்விதான் எழுந்திருக்கிறது?

உளவு பிரிவினுடைய தகவலின் அடிப்படையில் சண்டிகரில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் அடிப்படையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது இந்த அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த அபாய ஒளி எழுப்பப்பட்ட பிறகு உடனடியாக பாதுகாப்பு படை வீரர்கள் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே நேற்றைய தினம் முதலே இந்தியாவில் இருக்கக்கூடிய பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் ராணுவ வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைல்லாம் மேற்கொண்டார்கள். அதன் விளைவாகதான் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தில் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.

மேலும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோ ஒட்டி மாநிலங்கள் வசிக்கக்கூடிய பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லக்கூடிய வகையில் அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்திருக்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் மீண்டும் சண்டிகரில் சைரன் ஒலி ஒலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் சண்டிகரை குறி வைத்திருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இருந்தாலும் அதற்கு முன்கூட்டியே நம்முடைய ராணுவர்கள் தயாராக இருக்கிறார்கள். சண்டிகர் மட்டுமல்ல எந்த இடத்தில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் ஏவுகனை மேற்கொண்டாலும் அதை எஸ் 400 மூலமாக வானிலை இடைமறித்து அழிக்கக்கூடிய சக்தியை நம்முடைய ராணுவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் போர் விமானங்கள் நம்முடைய எல்லை பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வட்டமடித்து வருகின்றன. ஏதேனும் அசம்பாவிதைகள் நடப்பதற்கு முன்பாகவே அதை முன்கூட்டியே கண்டறியக்கூடிய வகையில் வட்டமடித்து வருகின்றன. வானில் நம்முடைய போர் விமானங்கள் கண்காணிப்பு பணி என்பது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏனென்றால் நேற்று இரவு முதல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்ட காரணத்தால் பாகிஸ்தான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான சேதங்கள் தவிர மற்ற எந்தவிதமான பெரிய சேதங்கள் நமக்கு ஏற்படவில்லை. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுடைய முயற்சி என்பது முறியடிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 

மேலும் படிக்க | ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்பும்-பின்பும் பாகிஸ்தான்! வைரலாகும் புகைப்படம்..

மேலும் படிக்க | 1 பெண்ணை வைத்து பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா! யார் இவர்? முழு விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News